Home விளையாட்டு 8  மாநிலங்களுக்கு இடையே  நீச்சல் போட்டி தமிழக மாணவி தங்கம் வென்றார்

8  மாநிலங்களுக்கு இடையே  நீச்சல் போட்டி தமிழக மாணவி தங்கம் வென்றார்

10
0
SHARE

சென்னை, அக். 4&

சென்னை ஆலப்பாக்கம் ஸ்ரீதேவி நகர் 7வது தெருவை சேர்ந்தவர்கள் சுகுமார் & சரண்யா தம்பதியர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்கள் சென்னையில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருக்கு ஹர்ஷிதா (10), சஜீதா (7) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஹர்ஷிதா மதுரவாயல் ஷாம் அகடாமி பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஏற்கனவே நீச்சல் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வாங்கியுள்ளார். இந்த நிலையில் தென்னிந்திய அளவில் சி.பி.எஸ்.. மண்டல அளவிலான நீச்சல் போட்டி நாக்பூரில் நடந்தது.

இதில் தமிறழ்நாடு, ஆந்திரா, தெலுங்கனா, கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, கோவா, அந்தமான் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 1200 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் 200 மாணவிகள் கலந்து கொண்டனர். 50 மீட்டர் நீச்சல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த  மாணவி ஹர்ஷிதாவும் பங்கேற்று முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றார். இதன் மூலம் அடுத்த மாதம் 26ம் தேதி அரியனாவில் தேசிய அளவில் நடக்க இருக்கும் நீச்சல் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவரை பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் பாராட்டினர்.