Home சுடச்சுட வங்கி வட்டி வீதம் இன்று அறிவிப்பு ரிசர்வ் வங்கி கைகொடுக்குமா?

வங்கி வட்டி வீதம் இன்று அறிவிப்பு ரிசர்வ் வங்கி கைகொடுக்குமா?

10
0
SHARE

புதுடெல்லி, அக். 4&

வங்கி வட்டி வீதம் இன்று அறிவிக்கப்படுகிறது.

வங்­கி­­ளுக்­கானரெப்போவட்­டியை குறைத்து நாட்­டின் பொரு­ளா­தார மந்த நிலையை சமா­ளிக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது. உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாத அறிவிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) போன்ற பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளால் வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதன் எதி­ரொ­லி­யாக 3 ஆண்­டு­களில் இல்லாத வகை­யில், நாட்­டின் ஒட்டு­மொத்த பொரு­ளா­தார வளர்ச்சி, ஏப்ரல் முதல் ஜூன் வரை­யி­லான காலாண்­டில், 5.7 சதவீத­மாக குறைந்­துள்­ளது.

அதே சம­யம் காய்­­றி­கள், பழங்­கள் ஆகி­­வற்­றின் விலை உயர்­வால், ஆகஸ்­டில், நாட்­டின் பண­வீக்­கம், 5 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 3.36 சத­வீ­­மாக அதி­­ரித்­துள்­ளது.

இது, ஜூலை­யில், 2.36 சத­வீ­­மாக இருந்­தது. இத்­­கைய சூழ­லில், பொரு­ளா­தா­ரம் மேலும் சுணக்­கம் அடை­வதை தடுத்து நிறுத்­திட, ரிசர்வ் வங்­கி­யின் உத­வியை, மத்­திய அரசு எதிர்­நோக்கி உள்ளது.

இந்த நிலையில் நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:&

மும்பையில் ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்­கிறது. இதில் வங்­கி­­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போவட்டி குறைக்­கப்­படும் என, மத்­திய அரசு எதிர்­பார்க்­கிறது.

அவ்வாறு நடந்தால் அது தற்போ­தைய பொரு­ளா­தார இக்­கட்டை சமாளிக்க ஓர­ளவு உத­வும். இவ்­வாறு அவர் கூறி­னார். இதே கருத்தை வலி­யு­றுத்தி பாரத ரிசர்வ் வங்­கிக்கு, இந்­திய வர்த்­தக கூட்­­மைப்­பான, ‘அசோ­செம்கடி­தம் எழுதி உள்­ளது.

இந்த நிலையில் பன்­னாட்டு நிதிச் சேவை நிறு­­­மான மார்கன் ஸ்டான்லி, ‘சில்­லரை பண­வீக்­கம் உயர்ந்­துள்­ள இச்சமயத்தில் பாரத ரிசர்வ் வங்கிரெப்போவட்டியை குறைப்­­தற்­கான சாத்­தி­யம், மிக­வும் குறை­வாகவே உள்­ளதுஎன தெரிவித்துள்ளது.இதனால் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இன்றைய கூட்டத்திற்கு பின் ரிசர்வ் வங்கியின் முடிவு தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here