Home சுடச்சுட புதிய பங்கு வெளியிடும் நிறுவனங்கள்

புதிய பங்கு வெளியிடும் நிறுவனங்கள்

19
0
SHARE

மும்பை, அக். 4&

இந்த வாரத்தில் கோத்ரேஜ் அக்ரோவெட் மற்றும் எம்..எஸ். பைனான்சியல் சர்வீஸ் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் காண்கின்றன.

இதில்கோத்ரேஜ்அக்ரோவெட்நிறுவனம்வேளாண்மைதுறையைசார்ந்ததுஆகும். இந்நிறுவனம் கால்நடை தீவன உற்பத்தி, பூச்சி மருந்துகள் தயாரிப்பு எண்ணெய் பனை சாகுபடி, பால் மற்றும் கோழிப்பண்ணை மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறது.

இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகின்றன. இந்த பங்குகளின் விற்பனை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும். இதன்மூலம் சுமார் ஆயிரத்து 160 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.450 முதல் ரூ.460 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த நிதி ஆண்டில் கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனம் 30 சதவீத வளர்ச்சியுடன் ரூ.4935 கோடி வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்..எஸ். பைனான்ஸ் நிறுவனமும் பங்கு வெளியிட உள்ளது.

இந்த பங்குகளின் விற்பனை வருகிற 6&ந் தேதி துவங்கி 10&ந் தேதி நிறைவடைகிறது. இந்த நிறுவனம் சுமார் ஒரு லட்சம் பங்குகளை தனிப்பட்ட முறையில் திரட்டி ரூ.135 கோடி திரட்டவும் முடிவு செய்து உள்ளது.