Home சுடச்சுட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: நீதிவிசாரணையை ரத்து செய்ய கோரிக்கை ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: நீதிவிசாரணையை ரத்து செய்ய கோரிக்கை சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வழக்கு

11
0
SHARE

சென்னை, அக். 4&

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் பற்றிய  நீதி விசாரணையை ரத்து செய்ய கோரி மூத்த வக்கீல் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோரது முன்னிலையில் மூத்த வக்கீல் கே.என்.விஜயன் ஆஜராகி ஒரு கோரிக்கை வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:&

எனதுகட்சிகாரர்ஜோசப்என்பவர்ஜெயலலிதாமரணம்குறித்துஓய்வுபெற்றசுப்ரீம்கோர்ட்டுநீதிபதிகள்தலைமையில்விசாரணைகுழுஅமைக்கவேண்டும்என்றுஏற்கனவே

வழக்கு தொடர்ந்துள்ளார். அது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக முதல்

அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்று உத்தரவிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வந்து அதன் அடிப்படையிலேயே தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க முடியும்.

ஜெயலலிதா மரணத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் நீதி விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் உங்களது கோரிக்கையை  மனுவாக தாக்கல் செய்யுங்கள். விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here