Home தமிழகம் ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதிய திட்டம் 11&ம் வகுப்பு மாணவர் அசத்தல்

ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதிய திட்டம் 11&ம் வகுப்பு மாணவர் அசத்தல்

6
0
SHARE

சென்னை, அக். 4&

ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்விபெறும் வகையில் புதியத்திட்டத்தை உருவாக்கிய 11ம் வகுப்பு மாணவனுக்கு பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் பாராட்டயுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எஸ்.டி.ஏ மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் பசுல் ரகுமான். இவர் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் ஒரு ரூபாய் சேமித்து அதை ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தலாம் என்ற முறையில்அப்துல்கலாம் புவர் சைல்டு சேவிங் ஆக்கோன்ட்என்று பெயரிட்டு முழுத்திட்ட வரைவுடன் பிரதமருக்கு கடிதத்தின் மூலம் அனுப்பியுள்ளார்.

பிறகு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாகவும், பாராட்டியும் பிரதமர் கையப்பம் அடங்கிய கடிதம் வந்துள்ளது. மேலும் இது குறித்து மாநில முதல்வரிடம் தெரிவிக்கவும் சொல்லியிருந்தது. எனவே தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களை சந்தித்த இந்த மாணவர் பாராட்டையும், திட்டத்திற்காக முழு ஒப்புதலையும் பெற்றார்.

இது குறித்து மாணவர் பசுல் ரகுமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுமார் மூன்றாண்டுகள் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏதெனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.

எனவேதான்இத்திட்டத்தைசெயல்படுத்தலாம்எனமுடிவுசெய்தேன். இது தொடர்பாக எனக்கு பல வழிமுறைகளைக்கூறி, இத்திட்டம் நிறைவேற உறுதுணையாக இருந்த தாம்பரத்தில் உள்ள இந்திய விமாப்படைத் மூத்த தளபதிக்கும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த திட்டத்தின் மூலம் வரும் பணத்தை இருபகுதியாக பிரித்து ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்த முடியும்.

மத்திய அரசால் முதன்மை அலுவலகம் அமைக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இத்திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். இது தொடர்பாக நான் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பார்த்தேன். அவர்கள் முழுஒப்புதலையும் வழங்கினர்.

அடுத்த வாரம் ஆளுநரை பார்ப்பதற்கும், அடுத்த மாதம் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் என்னைப்பற்றி 3 நிமிடம் பேசியுள்ளார். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவும், ஊக்கமாளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here