Home மற்றவை சசிகலா, இளவரசியின் சிறுதாவூர் பங்களாவுக்கு தொடர்ந்து பாதுகாப்பு

சசிகலா, இளவரசியின் சிறுதாவூர் பங்களாவுக்கு தொடர்ந்து பாதுகாப்பு

12
0
SHARE

திருப்போரூர், அக். 4&

சசிகலா, இளவரசிக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பழைய மாமல்லபுரம் சாலையில் திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கிச்சென்ற பங்களா உள்ளது.

சசிகலா, இளவரசி பெயரில் உள்ள இந்த பங்களாவின் ஒரு பகுதி சொத்துகுவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.இது சுமார் 15க்கும் மேற்பட்ட செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த பங்களாவிற்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

தற்போது பங்களா நுழைவாயில் மற்றும் பங்களாவிற்கு பக்கவாட்டில் உள்ள 2 தனியார் வழிகள் உள்ளிட்ட 3 இடங்களில் மட்டுமே ஷிப்டுக்கு 6 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பங்களாவிற்குள் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா கணவர் நடராஜன் சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இதற்காக சிறையில் இருக்கும் சசிகலா பரோல் கேட்டு கணவரை பார்க்க சென்னைக்கு வர உள்ளார். அப்படி வந்தால் மருத்துவ மனையிலிருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள இந்த பங்களாவிற்கு வந்து செல்வாரா? என்று தெரியவில்லை.