Home மற்றவை தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.95 கோடி தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.95 கோடி தேர்தல் ஆணையம் தகவல்

4
0
SHARE

சென்னை, அக். 4&

தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.95 கோடியாக உயர்ந்துள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1.1.2018 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின்  சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 03.10.2017 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன

மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும். இந்த சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2018&ன்போது, வாக்காளர்பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதோடு,  இறந்த, இடம்பெயர்ந்த

வாக்காளர் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.  05.01.2017 அன்று வெளியிடப்பட்ட முந்தைய சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2017ன் இறுதி வாக்காளர் பட்டியலின்படி  தமிழ்நாட்டில் 5.93 கோடி வாக்காளர்கள் இருந்தனர் (ஆண்கள்: 2.93 கோடி, பெண்கள்: 3.00 கோடி,  மூன்றாம் பாலினத்தவர்: 5040)

06.01.2017 முதல் 02.10.2017 வரையிலான தொடர் திருத்தக் காலத்தில் 5.47 லட்சம் வாக்காளர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இறப்பு, இடம் பெயர்வு மற்றும் இருமுறை பதிவு போன்ற காரணங்களால் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரையறைகளுக்குட்பட்டு 2.31 லட்சம் நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. 03.10.2017 அன்று வெளியிடப்பட்டுள்ள 2018 சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5.95 கோடி வாக்காளர்கள்  உள்ளனர்.(ஆண்கள்: 2.95 கோடி, பெண்கள்: 3.00 கோடி, மூன்றாம் பாலினத்தவர்: 5242 ) 6.24 லட்சம் வாக்காளர்களுடன், மாநிலத்திலேயே உயரளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 27.சோழிங்க நல்லூர் தொகுதி உள்ளது (ஆண்கள்:  3.13 இலட்சம், பெண்கள்: 3.10 லட்சம்,  மூன்றாம் பாலினத்தவர்: 74 )

1.68 லட்சம் வாக்காளர்களுடன்  மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள  164.கீழ்வேளூர் தொகுதி உள்ளது (ஆண்கள்:  0.83 லட்சம், பெண்கள்: 0.85 இலட்சம்,  மூன்றாம் பாலினத்தவர்: 1 ) 07.10.2017 மற்றும் 21.10.2017 ஆகிய நாட்களில் கிராம சபை / உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம், பிரிவு  ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும் 08.10.2017 மற்றும் 22.10.2017  ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக, வாக்குச் சாவடிகள்)

சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடம் மாற்றுதல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அளிக்கவேண்டிய ஆவணங்கள்பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு, தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது, ஆதார் கார்டு  போன்றவற்றை முகவரிச் சான்றாகச் சமர்ப்பிக்கலாம். வயது சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பள்ளிச் சான்றிதழின் நகல் அளிக்கப்படலாம்.

25 வயதுக்குக் கீழுள்ள மனுதாரர்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். 1.1.2018 அன்று 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்கலாம். இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தாலும், தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும், முன்னர் பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்க இயலவில்லை எனவும் (அல்லது) தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது எனவும் குறிப்பிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here