Home மற்றவை தாது மணல் கொள்ளை வழக்கு: வழக்கறிஞரை விடுவிக்க கோரி மனுஉயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

தாது மணல் கொள்ளை வழக்கு: வழக்கறிஞரை விடுவிக்க கோரி மனுஉயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

19
0
SHARE

சென்னை, அக். 4&

தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவிட நியமிக்கப்பட்ட வழக்கறிஞரை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த தாது மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி விக்டர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் வி.சுரேஷ் என்பவரை கடந்த ஆண்டு நியமித்து அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவிட்டார்.

அதன்படி வழக்கறிஞர் வி. சுரேஷ¨ம் தனது ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந் நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வி.சுரேஷைஅமிகஸ் க்யூரிஎன்ற அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த டிரான்ஸ் வேர்ல்டு கார்னெட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்டீபன் டேவிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட கடற்கரை தாது மணல் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சுந்தரம் என்பவருக்காக வழக்கறிஞர் வி. சுரேஷ§ம் அவரது மனைவியும் ஆஜராகியுள்ளனர்.

இச்சூழலில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் அவரையே உயர் நீதிமன்றத்திற்கு உதவும் நபராக நியமித்து இருப்பதால், அவரிடம் நடுநிலைமையை எதிர்பார்க்க முடியாது.

தவிர வழக்கறிஞர் வி.சுரேஷ், பியூசிஎல் என்ற தொண்டு நிறுவன உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த பியூசிஎல் நிறுவனம் ஏற்கெனவே உண்மை கண்டறியும் குழுவை அமைத்த பல தாது மணல் நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை நடத்தியுள்ளது.

தவிர பியூசிஎல் என்ற இதழின் ஆசிரியராகவும் இந்த சுரேஷ் உள்ளார். அவர் ஒரு வழக்கறிஞர் தானேயன்றி தொழில்நுட்ப ரீதியாக தாது மணல் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்க அவர் நிபுணர் கிடையாது.

ஆகவே இந்தக் காரணங்களால் அவரை இந்த வழக்கில் இருந்து அமிகஸ் க்யூரி என்ற பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.