Home சுடச்சுட அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 கோடியே 23 லட்சம்மாணவர்களுக்கு 2&ம் பருவ...

அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 கோடியே 23 லட்சம்மாணவர்களுக்கு 2&ம் பருவ பாடப்புத்தகம் விநியோகம்

7
0
SHARE

சென்னை, அக். 4&

அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 1 கோடியே 23 லட்சம் மாணவர்களுக்கு 2ம் பருவத்திற்கான   பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடைகள் நேற்றே வழங்கப்பட்டன.   

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல்

12&ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. அதில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3 பருவத்திற்கும் தனித்தனியாக ஒவ்வொரு பருவத்திற்கான பள்ளித் திறக்கும் போது பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

2&ம் பருவத்திற்கான பாடப்புத்தகம் 1 முதல்

9 &ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையின்றி வழங்குவதற்கு 1 கோடியே 23 லட்சம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள கழகத்தின் மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு22&ந் தேதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.

65 லட்சத்து 26 ஆயிரம் புத்தகம் அச்சிடப்பட்டு,  தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவையான புத்தகத்தை பெற்றுக் கொண்டன.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை ஆகியவை நேற்று பள்ளிகளில் வழங்கப்பட்டன. சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 9&ம் வகுப்பு வரை  பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகம், நோட்டுகள், சீருடையை தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலர் பாண்டியன், எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகவேல் ஆகியோர் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here