Home தமிழகம் கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை தமிழகம் என்ன செய்யப் போகிறது? ராமதாஸ் கேள்வி

கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை தமிழகம் என்ன செய்யப் போகிறது? ராமதாஸ் கேள்வி

12
0
SHARE

சென்னை, அக். 4&

கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே வேலை சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் என்ன செய்யபோகிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்துபா... நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளை கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

  கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கன்னடத்தை ஒரு பாடமாக படித்தவர்களும், கர்நாடகத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வாழ்ந்து கன்னடத்தில் எழுதப் பேசத் தெரிந்தவர்களும் கன்னடர்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் பணி நிமித்தமாக நீண்ட காலம் வெளிநாட்டிலோ, வெளி மாநிலங்களிலோ பணியாற்றி விட்டு, சொந்த மாநிலத்திற்கு திரும்பும்பட்சத்தில் அவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படாத வகையில் சில விதிவிலக்குகளை கொண்டு வரவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.

இதனால் கர்நாடக தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கான வேலைவாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும். தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் ஆகியவற்றைத் தாண்டி, தமிழர்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலும் இதே நிலை தான் காணப்படுகிறது. தொடக்கத்தில் உயர்பதவிகளில் வட இந்தியர்கள் திணிக்கப்பட்ட நிலை மாறி இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூட பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படுகின்றனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கூட தமிழரை நியமிக்க நிர்வாகம் தயாராக இல்லை.

இத்தகைய சூழலில் தமிழர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தால் அந்த மாநிலத்தில், குறிப்பாக பெங்களூர், மைசூர்  பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் வேலைவாய்ப்பு மிகக்கடுமையாக பாதிக்கப்படும். சொந்த மாநிலமான தமிழகத்திலும் வேலைவாய்ப்புகளை மற்ற மாநிலத்தவரிடம் பறி கொடுத்து பிற மாநிலங்களிலும் வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலை தமிழர்களுக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது.

அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுத்து தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?கன்னடர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள சட்டத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளில் தமிழர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் தமிழக அரசு விவாதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.