Home சிறப்புச் செய்திகள் நலமான இதயத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்

நலமான இதயத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்

39
0
SHARE

6 வயது முதல் 60 வயது வரை நோய் என்பது நிழல் போல அனைவரையும் துரத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நோய்களைப் பற்றி கவலைப்படும் நாம் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துகிறோமா? என்றால் இல்லை . மனிதன் உயிர் வாழ்கிறான் என்பதை உறுதி செய்வது அவரவர் இதயம் துடிப்புதான். அந்த இதயத்தை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்கிறோமா?.

கண்களில் படுவதையும், கைகளுக்கு கிடைப்பதையும் மெஷின் என்று நினைத்து உடலுக்குள் தள்ளிவிடுகிறோம். அத்தனையும் நம் உடம்பு ஏற்றுக்கொள்ளுமா? என்றால் இல்லை. இப்படி நாம் நலமுடன் வாழ வாழ்க்கை முழுவதும் துணைபுரிவது இதயம். அதன் நலத்திற்காக சில உணவுகளை நாம் தவிர்ப்பது தவறில்லையே.

1. பாஸ்ட் & புட் &பர்கர்

கொழுப்பு உணவுகள் அதிகம் உண்பவர்களுக்கு எளிதில் மாரடைப்பு வந்துவிடும் என்பது நாம் அறிந்ததே. இன்றைய சூழலில் அனைவருக்கும் பிடித்த உணவு என்பது இறைச்சி தான். ஆனால் அனைத்து விலங்குகளின் இறைச்சிகளும் உண்பதற்கு உகந்ததா என்றால் இல்லை?. பொதுவாக இதய சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது பீப் (மாட்டு இறைச்சி) தான்.

ஆனால் அதுவே அளவுக்கு மீறி உண்டால் இறப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ரோட்டோரத்தில் தொடங்கி, ஸ்டார் ஓட்டல் வரை என எந்த இடத்தில் சாப்பிடும் இறைச்சியும் நம் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை. சுவைக்காக பல்வேறு வகையான கெமிக்கல்கள் சேர்க்கப்படுவது ஒரு பக்கம்.

சாட்சுரேட்டட்கொழுப்புகள்உடலுக்குநல்லதுஎன்றாலும்அதிலும்கார்போஹைரேட்இணைந்திருப்பதால்இதயம்பாதிக்கப்படும்என்பதுமறுபக்கம். அதற்காக சாப்பிடாமலா இருக்க முடியும், தேவையான உணவை வீட்டில் சமைத்து உண்பது சிறந்தது.

2. பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட, பதப்படுத்தப்படாத உணவுகளை தேடுவது தான் இங்கு கடினம். பழங்கள் முதல் இறைச்சி வரை அனைத்து பொருட்களும் பதப்படுத்தப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு உணவுப்பொருள் பதப்படுத்தப்படும் போது, அது பெயரளவிலான பொருள் மட்டுமே, அதனால் எந்த பயனும் இல்லை. அதில் பயன்படுத்தப்படும் மெழுகுப் பொருட்கள் இதயத்திற்கு மட்டுமல்ல, உடலுக்கே தீங்கு விளைவிக்க கூடியவை.  நம்மில் சிலர் சாப்பாட்டில் உப்பு சேர்த்து கொள்ளமாட்டார்கள், அதற்கு காரணம் ரத்த கொதிப்பு அதிகமாகிவிடும் என்பதாக இருக்கும். உண்மையில் சரியான உணவு பழக்கத்தை கடைபிடிப்பவர்கள் எந்த வகையான உணவுப் பொருளையும் தவிர்க்க வேண்டியதில்லை என்கிறார்கள் உலகளாவிய இதய வல்லுநர்கள்.

3. வறுத்த உணவுகள்

எல்லோருக்கும் பிடித்தமான உணவு என்றால் அது, ப்ரென்ஞ் பிரை, ப்ரைடு சிக்கன், ப்ரைடு ஸ்நாக்ஸ். வீட்டில் இருக்கும் போதும் சரி, குடும்பத்தோடு ஜாலியாக வெளியில் செல்லும் போதும் சரி அனைவரும் விரும்பி உண்பது வறுத்த உணவுகளைத்தான்.  ஆனால் இதிலிருக்கும் சில கொழுப்பு பொருட்கள் வறுத்த பின்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையாக மாறக்கூடியது. அதனால் வெளியிடங்களில் இது போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீடுகளில் சிலர் சமையலறையில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்த தயங்குவார்கள். ஆனால் அது தவறு. எப்போதும் பயன்படுத்தாமல் அரிதாக பயன்படுத்துவது சிறந்தது

4. இனிப்புகள்

வயதை மறந்து எல்லோரையும் குழந்தையாக்குவது சாக்லேட் தான். இதில் பல்வேறு வகையான சாக்லேட்டுகள் உள்ளன, அவற்றின் விலைகளைப் பொறுத்து மக்கள் தரத்தை தீர்மானித்துக் கொள்கிறார்கள். சாக்லேட் உடலுக்கு நல்லது என்று பல இடங்களில் எல்லோரும் படித்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அதில் உள்ள கொழுப்புக்கு இதய நோய் ஏற்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது.

உடல் பருமன், திடீரென்று ஏற்படும் வீக்கம், உடலில் சேரும் அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள் தான்.

கொழுப்போடு இனிப்பு சேரும்போது அது இதயத்தின் செயலை தடை செய்து உயிரிழப்புக்குத் தான் வழிவகுக்கும். இதய நோயை தவிர்க்க விரும்புபவர்கள் எந்த வகையிலும் இனிப்பை உட்கொள்ளக்கூடாது.

5. குளிர்பானங்கள்

குளிர்பானங்கள் என்றாலே அது தொலைக்காட்சியில் விளம்பரம்படுத்த பட்டதா என நம் மனம் தேடும். எப்போதும் நம் மேல் இருக்கும் நம்பிக்கையை விட அருகில் இருப்பவர்கள் மேல் அதிகம் வைத்து விடுகிறோம். அதுதான் இதற்கெல்லாம் காரணம்.

இளநீர், பதனீர் போன்றவற்றின் அருமை தெரியாமல், பாட்டில்களில் கிடைக்கும் குளிர்பானங்களைத்தான் அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். அமெரிக்காவினரின் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு, மிகக்குறைவு ஆனால் அவர்கள் பயன்படுத்தும் குளிர்பானங்களிலிருந்து கிடைக்கும் சர்க்கரையின் அளவு அதிகம். அங்கு குளிர்பானங்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் இளம் வயதினர்கள் தான். தினமும் ஒரு குளிர்பானமோ அல்லது சோடாவோ ஏதோ ஒன்றை குடிக்கும் பழக்கத்தை அனைவரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.