Home சிறப்புச் செய்திகள் ந டி ப் பு க் கெ ...

ந டி ப் பு க் கெ ன பி ற ந் த ந டி க ர் தி ல க ம்

27
0
SHARE

நாடகப் பாடப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டே இருப்பதால், சிவாஜிக்கு புத்தகப் புழு என்ற பெயரும் நாடகக் கம்பெனியில் உண்டு. நாடகக் கம்பெனியில் கடுமையான பயிற்சிக் கொடுத்தார்கள். நாடகக் கம்பெனியில் நல்லச் சாப்பாடு இருக்காது. சாம்பார், ரசம், மோர், இரண்டு கூட்டுப் பொறியல் என எதுவும் கிடையாது. ஒரு வேளைக்கு ஒரு ரசம் சாதம் அல்லது மோர் சாதம், தொட்டுக்கொள்ள ஒரு அப்பளம் என இவ்வளவுதான் இருக்கும். இதைச் சாப்பிட்டு விட்டு, வறுமையில் இருக்கும் நாடகத்தில் நடிப்பவர்கள், ராஜா மாதிரி சத்தம் போட்டு பேசி, மேடையில் நடிக்க வேண்டும். சாப்பாடு முக்கியமல்ல, தொழில்தான் முக்கியம் என கற்றுக் கொடுத்தது குருகுலம்தான்.

பி..பெருமாள் முதலியார் தயாரித்த முதல் படம் பராசக்தி. ராஜா, ராணி கதைகள், புராண, இதிகாசக் கதைகள் என தமிழ் சினிமா வாழ்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், கடந்த 1962ம் ஆண்டு பராசக்தி படம் வெளியானது. நிகழ்கால சமூகக் கதைகளுக்கே இனி பரிபூரண வெற்றி கிடைக்கும் என்ற புதிய சிந்தனையை, நம்பிக்கையை சினிமா உலகில் விதைக்கப்பட்ட படம்தான் பராசக்தி திரைப்படம். அந்தத் படத்தில்தான் முதன் முதலாக சிவாஜி நடித்தார்.

இந்தப் படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்த போதே, பி..பி.யின் சிபாரிசில், அஞ்சலி பிக்சர்ஸின் முதல் தயாரிப்பான பூங்கோதை என்ற தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாரான படத்தில், சிவாஜி இரண்டாவது கதாநாயனாக நடித்தார். சிவாஜியை தெலுங்கில் அறிமுகப்படுத்திய இயக்குநர் எல்.வி.பிரசாத்.

திரையுலக இளவரசன் சிவாஜி கணேசன் நடித்த திரும்பிப் பார் என்ற மாடர்ன் தியேட்டர்ஸ் டிரையிலர் காட்டியது. தமிழ் சினிமா உலகில் முதன் முறையாக டிரையிலர் காட்டப்பட்டது திரும்பிப் பார் படத்துக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பராசக்திக்குப் பிறகு, 1952ம் ஆண்டு சிவாஜி கணேசனுக்கு உடனடியாகப் பணம் வந்தது.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில், சிவாஜி கணேசனும் நடித்த ஒரே படம் பணம் படம்தான்.

மேலும், மெல்லிசை மன்னர் களான எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்த முதல் படமும் பணம் படம்தான். பணம் படத்தில் துவக்கிய, இவர்களது நட்பு நாற்பது படங்களுக்கும் மேலாக அமோக வெற்றி பெற்றுள்ளது. பணம் படத்தில்தான், சிவாஜி கணேசனும், பத்மினியும் இணைந்து நடித்த முதல் படமாகும். பணம் படத்திலிருந்து, சிவாஜி கணேசன், பத்மினி ஜோடி நட்சத்திர ஜோடியாக திகழ்ந்தது.

தமிழ் இலக்கிய உலகத்தில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான விந்தன், முதன் முதலாக வசனம் எழுதிய படம் அன்பு. இதில்தான் தமிழ் சினிமாவில் ஓரங்க நாடகத்தை முதன் முறையாக அறிமுகம் செய்து வைத்தார் விந்தன். மீண்டும் இதன் மூலம் சிவாஜி கணேசன், பத்மினி ஜோடியாக நடித்தார்கள்.

பராசக்தி படத்துக்குப் பிறகு, சிவாஜி கணேசன், கருணாநிதி கூட்டணி மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் திரும்பிப் பார். மாடர்ன் தியேட்டர்ஸில் சிவாஜி கணேசனுக்கு முதல் படம். இந்தப் படத்தில், சிவாஜி கணேசன் வில்லன் வேடம் ஏற்றிருந்தார். திரும்பிப் பார் படத்துக்குப் பிறகு, உத்தம புத்திரன், அன்னையின் ஆணை, பெண்ணின் பெருமை, துளி விஷம் போன்ற படங்களிலும் சிவாஜி கணேசன் வில்லனாக நடித்தார்.

சிவாஜி கணேசனின் ஆரம்பக் காலத் திரைப் படங்கள், ஒவ்வொன்றுமே சிவாஜியின் எதிர்கால சினிமா வாழ்க்கைக்கான பலமான அஸ்த்திவாரமாகவே அமைந்தது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். வசனங்களுக் காவே புகழ் பெற்ற சிவாஜி கணேசன், மிகவும் அதிகமான பாடல்களுக்கு வாயசைத்துப் பாடிய முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது தூக்குத் தூக்கி திரைப்படமாகும். இந்தப் படத்தில்தான் முதன் முதலாக, சிவாஜி கணேசனுக்கு, பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் பாடல்களைப் பாடினார்.

தூக்குத் தூக்கி திரைப்படத்தில் ஜனரஞ்சகமாக நடித்ததற்காக, சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம், சிவாஜி கணேசனை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்துப் பாராட்டியது. முதன் முதலில் ரசிகர்களால் பாராட்டி கௌரவப்படுத்தப் பட்டதும் தூக்குத் தூக்கி படத்துக்காகத்தான். மேலும், தூக்கு தூக்கி திரைப்படத்தில்தான், லலிதா, பத்மினி, ராகிணி என மூன்று சகோதரிகளும் இணைந்து, சிவாஜி கணேசனுடன் நடித்த முதல் படம் இதுதான்.

சரவணபவ யுனிட்டி என்ற பட நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் எதிர்பாராதது. அந்தக் காலத்தில், முதன் முதலாகப் படம் எடுக்க வருகிறவர்கள் தேடும் முதல் நடிகராக இருந்தவர் சிவாஜி கணேசன்தான். சிவாஜி கணேசனுடன், இயக்குநர் ஸ்ரீதர் இணைந்த முதல் படம் எதிர்பாராதது. பராசக்தி, மனோகரா, தூக்குத் தூக்கி திரைப் படங்களுக்குப் பிறகு, இளம் தமிழ் ரசிகர்களை அதிகமாக எதிர்பார்க்க வைத்த படம் எதிர்பாராதது படம்தான். எதிர்பாராதது படத்தில் நடித்த பத்மினி, சிவாஜி கணேசனுக்கு, பியட் கார் ஒன்றை பரிசாகக் கொடுத்தார்.

1954ம் ஆண்டு சிவாஜி கணேசனுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. 1955ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த முதல் தேதி, கள்வனின் காதலி, மங்கையர் திலகம் என்று மூன்று திரைப்படங்களும், அவரது திரையுலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலு தயாரித்த படம் முதல் தேதி. எந்த கதாநாயகனும் ஏற்கத் துணியாத வேடத்தில் சிவாஜி கணேசன் அப்போது நடித்தார். வயது வந்த பெண்ணின் தந்தையாக, தனது 27 வயதிலேயே, அப்பா வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் முதல் தேதி.

ஆனால் படம் தோல்வி அடைந்தது. மங்கையர் திலகம் படம், 1955ல் தேசிய நற்சான்றிதழ் பெற்ற சிவாஜி கணேசன் படம். இந்தப் படம் முழுக்க முழுக்க பத்மினிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட கதை அமைப்பாகும். பத்மினியை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்த படம் இது.

எந்த ரோலாக இருந்தாலும் அதற்கேற்ப முகத்தை, உணர்ச்சிகளை உடனே மாற்றிக் கொள்ளக்கூடிய அபூர்வக் கலைஞர்தான் சிவாஜி கணேசன். அவர் சேர்ந்தார் போல் 10 படங்களில் நடித்துக் கொண்டிருப்பார். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் கொஞ்சம் கூட குழப்பம் இல்லாமல், அவர் வசனங்களைப் பேசுவதையும், நடிப்பை மாற்றிக் கொள்வதையும், பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். உலகத்திலேயே மிகச்சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்தான் என்றால் ரொம்ப ரொம்ப பொருத்தமாகவே இருக்கும்.

வணங்காமுடி படத்துக்காக, சென்னை சித்ரா தியேட்டர் வாசலில் சிவாஜி கணேசனுக்கு,என்பது அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டது. அது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த அளவுக்கு உயரமான கட் அவுட் வைக்கப்பட்டதும் இதுதான் முதல் முறை. தன்னுடைய நடிப்புத் தொழில் இமேஜ் வைத்துக் கொள்ளாத ஒரே நடிகர் சிவாஜி கணேசன்தான்.

எம்.ஜி.ஆர்.திமுக நடிகராக மக்களைக் கவர்ந்து வந்த காலக்கட்டத்தில், பகுத்தறிவை வளர்க்கும் கட்சியில் இருக்கும் முக்கியமான நடிகர் எம்.ஜி.ஆர்.மந்திர தந்திர காட்சிகளில் நடிக்க எம்.ஜி.ஆர்.தயங்கினார். அப்போது காத்தவராயன் படம் தயாரிப்பில் இருந்த நேரம்.

சிவாஜி கணேசனைச் சந்தித்து, இயக்குநர் டி.ஆர்.ராமாண்ணா நிலைமையை விளக்கிக் கூறினார். காத்தவராயன் படத்தில் இருந்து எம்.ஜி.ஆர்.ஒதுங்கிக் கொண்டார். இந்தத் தகவல் தெரிந்த சிவாஜி கணேசன், ராமாண்ணாவுக்கு கைக் கொடுத்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்தான், தமிழ் சினிமாவின் முதல் சரித்திரப் படமாகும். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், வெற்றி வடிவேலனே என்ற பாடல்தான் படத்தின் முதல் காட்சியாக படமாக்கப்பட்டது. சிவாஜி கணேசனுக்கு இந்தப் படம்தான் முதல் கலர் படமாகும். ஜெய்ப்புரில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு உண்டு. இலண்டனில் பிரதி எடுக்கப்பட்ட முதல் டெக்னிக் கலர் தமிழ்ப் படம் என்ற பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைபடத்தின் விழா ஒன்றில் சிவாஜி கணேசன் பேசும் போது, என்றாவது ஒருநாள் கட்டபொம்மனாக நடிப்போம் என்ற நம்பிக்கையில் தான், நான் அனாதை என்றுச் சொல்லிக்கொண்டு நாடகக் கம்பெனியில் போய்ச் சேர்ந்தேன். நான் ஏழு வயதில் கண்ட கட்டபொம்மன் கனவு என்னுடைய 30 வது வயதில் பூர்த்தியானது என்றும், நான் இறந்தாலும் கட்ட பொம்மனை மறக்க மாட்டேன் எனப் பேசியுள்ளார்.

வீரபாண்டியன் கட்டபொம்மன் திரைப்படத்திற்காக, கெய்ரோவில் சிறந்த நடிகர் விருது பெற்று, 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, சென்னை விமான நிலையத்தில் தமிழ் சினிமா உலகம் சார்பில் கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. சிவாஜி கணேசனுக்கு, செவாலியே விருது கிடைக்க முக்கிய காரணமாக இருந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் என்றால் அது மிகையாகாது.

தொடரும்