Home மருத்துவம் மனத்தக்காளி கீரையின் சிறப்புகள்

மனத்தக்காளி கீரையின் சிறப்புகள்

26
0
SHARE

கீரைகள் என்றாலே நம் எல்லோருக்கும் இரண்டாம் பட்சம்தான் . அதை பெரியவர்களே சாப்பிட தயங்கும் போது குழந்தைகள் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் மற்ற சத்தான உணவுகளை போல கீரைகளிலும் அதிக சத்துக்கள் உள்ளன.  நம் உடலில் ஏற்படும் பல வியாதிகளை இவைகள் அப்படியே இயற்கையான முறையில் சரி செய்து விடுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. சரி இன்று நாம் சின்ன சின்ன காய்கள் இருக்கும் மனதக்காளி கீரையின் சிறப்புகளை பற்றி பார்போமா.

இந்த கீரையை உணவாக மட்டும் பார்க்காமல் ஒரு மருந்தாகவும் பார்க்கலாம். அந்த அளவுக்கு இதில் சத்துக்கள் உள்ளன. சீன மருத்துவத்தில் கேன்சருக்கு சிறந்த மருந்தாக இது உட்கொள்ளப்படுகிறது. ஐரோப்பாவில் உடல் சூடு ஏறி அதனால் ஏற்படும் கட்டிக்கு இந்த கீரையை மருந்தாக பயன்படுத்துவார்கள். அரபு நாட்டு மருத்துவத்தில் இதை புதிதாக ஏற்பட்ட காயங்களுக்கும் அதனால் ஏற்பட்ட வீக்கத்துக்கும் இதை மருந்தாக பயன்படுத்துவார்கள்.

இதை உட்கொள்வதால்  நமது வாயில் ஏற்படும் புண்கள் குணமடையும். இதை ஜூசாக்கி அதை கூட நாம்  வாயில் ஊற்றி கொப்பளித்து விடலாம். சில இலைகளை வாயில் போட்டு லேசாக கடித்து சிறிது நேரம் அப்படியே வைத்து கொள்ளுங்கள் புண்கள் சரியாகிவிடும்.

சிலபேருக்கிசிறுநீரைவெளியேற்றுவதில்சிரமம்ஏற்படும். இந்த கீரையும் அதன் தண்டுகளையும் டிகாக்ஷன் போல் போட்டு குடித்து வந்தால் சிறுநீர் கழிப்பதில் எந்த சிரமமும் இருக்காது.

ஜீரண கோளாறு என்பது எல்லோரும் சந்திக்கும் பிரச்சனையாகும் . அந்தமாதிரிசமயத்தில்நாம்இந்தஇலைகளின்சாறுநமக்கு

நல்லதொரு தீர்வாகும்.

இதன் இலைகளும் காய்களும் நமது ஜுரத்தை கட்டுப்படுத்தும் குணமுடையது என்பது குறிப்பிடதக்கது

வயிற்று போக்கு சில பேருக்கு அடிக்கடி ஏற்படும். எதை சாப்பிட்டாலும் வயிற்று போக்கு ஏற்படும் அப்படி பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அந்த பிரச்சனை அறவே நீங்கிவிடும்.

தீப்புண்களுக்கு இந்த கீரை அருமருந்து. இந்த கீரையின் சாறை தடவினால் அந்த தீப்புண் குணமாகும்.

ருமேடிசம் வலி உள்ளவர்கள் இந்த கீரையின் சாறை அந்த இடங்களில் தடவினால் வலி நாள்பட குணமாகும்.

சாதாரண வலி மற்றும் வீக்கங்களுக்கு இதை மேல் பூச்சாக தடவினால் அது உடனடியாக குணாமாகும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளுக்கு இந்த கீரையின் சாறு அருமருந்து. இதை உட்கொண்டு வந்தால் வலி குணமாகும்.