Home சமையல் கடபாகாரதோசை

கடபாகாரதோசை

9
0
SHARE

தோசைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். அதில் இந்த தோசை முற்றிலும் வித்தியாசமான விதம் . இதன் சிறப்பே  தோசையின் மேல் தடவப்படும் கடலை மாவு மற்றும் சிகப்பு கார சட்டினி தான். அந்த தோசையை எப்படி செய்வது என்று பார்ப்போமா.

தேவையான பொருட்கள்

கடலைமாவுசட்டினிக்கு

கடலை மாவு& 3 டேபிள் ஸ்பூன்

வெங்காயம்&2

தக்காளி&1

பச்சை மிளகாய்&4

இஞ்சி& (பொடியாக நறுக்கியது)& 1 டீ ஸ்பூன்

தண்ணிர்& 2 1/4 கப்

நெய்& 1 டீ ஸ்பூன்

கொத்தமல்லி இலை& 2 டேபிள் ஸ்பூன்

( பொடியாக நறுக்கியது)

தாளிக்க

எண்ணெய்&1 டேபிள் ஸ்பூன்

கடுகு& 3/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு& 2 டீ ஸ்பூன்

கடலை பருப்பு& 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பில்லை& 1 கொத்து

செய்முறை

வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கரைத்து ஒரு பேஸ்ட் பதத்தில் வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்திருக்கும் அனைத்து பொருட்களையும் போட்டு தாளிக்கவும்.

அதன் மேல் வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும், நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். இதற்கு தேவையான உப்பையும் சேர்க்கவும். தக்காளி மிருதுவாகும் வரை வதக்கவும். வதக்கியவுடன் கரைத்த கடலை மாவை சேர்க்கவும்.

அதை 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பூரிக்கு செய்யும் மசாலா பதத்தை  போல் இது இருக்க வேண்டும். மேலே நறுக்கிய கொத்தமல்லி மற்றும் நெய்யை சேர்க்கவும்.

கார சட்டிணிக்கு

தேவையான பொருட்கள்

வெங்காயம்& 2

தக்காளி&1

சிகப்பு மிளகாய் பொடி&1 1/2 டீ ஸ்பூன்

உப்பு& தேவைக்கு ஏற்ப

செய்முறை

தக்காளியையும், வெங்காயத்தையும் நறுக்கி அதனுடன் சிகப்பு மிளகாய் பொடியையும் உப்பும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

கடபாகாரதோசை

செய்முறை

தோசையை எப்போதும் போல் வாத்து கொள்ளவும். தோசை வெந்த பின் அதன் மேல் சிறு துளிகள் எண்ணெய் விட்டு கார சட்டினியை அதன் மேல் தடவவும், அதன் பின் கடலை மாவு சட்டினியை தடவவும். இப்போது உங்கள் விருப்பம் போல் தோசையை மூடவும். அவ்வளவு தான் சூடான, வித்தியாசமான, சுவையான கடபா கார தோசை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here