Home சுடச்சுட மருத்துவ துறைக்கான நோபல் பரிசுக்கு 3 விஞ்ஞானிகள் தேர்வு

மருத்துவ துறைக்கான நோபல் பரிசுக்கு 3 விஞ்ஞானிகள் தேர்வு

12
0
SHARE

ஸ்டாக்ஹோம், அக்.3&

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும்இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி உள்ளிட்ட துறைகளில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பங்களிப்பை ஆற்றுவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு குழு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ளது. மருத்துவத்துக்கான நோபல் பரிசை அந்த குழுவின் தலைவர் தாமஸ் வெர்ல்மென் நேற்று அறிவித்தார். மருத்துவ துறையில் ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகிய 3 பேருக்கு இந்த பரிசு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

மூலக்கூறு தொடர்பான ஆய்வுக்காக இவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பரிசுத் தொகையான ரூ.7 கோடி 3 பேருக்கும் சமமாக அளிக்கப்படும். மனிதனின் உயிர் கடிகாரம் பூமியின் சுழற்சியோடு சேர்ந்தே இயங்குகிறது என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பு.

அத்துடன் அந்த கடிகாரமே நமது தூக்கம், உண்ணும் முறை, ஹார்மோனை வெளியிடுதல் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை முறைப்படுத்துவதாகவும் இவர்களது கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.