Home தமிழகம் தமிழக பொறுப்பு ஆளுனர்வித்யாசாகர்ராவ் பிரியா விடை பெற்றார் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். சந்திப்பு

தமிழக பொறுப்பு ஆளுனர்வித்யாசாகர்ராவ் பிரியா விடை பெற்றார் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். சந்திப்பு

24
0
SHARE

சென்னை,அக்.3&

தமிழகத்திற்கு புதிய ஆளுனர் பதவியேற்க உள்ள நிலையில் பொறுப்பு ஆளுனர் சி. வித்யாசாகர் ராவ் நேற்று பிரியாவிடை பெற்றார். கடந்த 13 மாதங்களாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுனராக வித்யாசாகர் ராவ் பதவி வகித்து வந்தார்.

தமிழகத்துக்கு முழுநேர ஆளுனராக அசாம் மாநிலத்தின் ஆளுனராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டார். இதனால் புதிய ஆளுனர் வருகைக்கு முன், பொறுப்பு ஆளுனர் சி.வித்யாசாகர் ராவ் நேற்று பிரியாவிடை பெற்றார்.

சந்திப்பு

சென்னை கிண்டி ஆளுனர் மாளிகைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினர்.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மலர்கொத்து வழங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுனருக்கு பொன்னாடை போர்த்தினார். தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் ஜெயக்குமாரும் ஆளுனர் வித்யாசாகர் ராவுக்கு  நன்றிகூறி

வழியனுப்பினர்.அப்போது ஆளுநர் வித்யாசாகர் ராவ் மனைவி சி.எச். வினோதா ராவ் உடனிருந்தார்.

முதல்முறை

2016&ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30&ம் தேதி, முன்னாள் ஆளுனர் ரோசய்யா, 5 ஆண்டுகள் தமிழகத்தில் ஆளுனராக இருந்து பதவி காலத்தை நிறைவு செய்தார்.

அதனையடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 31&ம் தேதி, சி. வித்யாசாகர் ராவை பொறுப்பு ஆளுனராக நியமித்தார்.

பல இக்கட்டான அரசியல் சூழ்நிலைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழகம் போன்ற பெரிய மாநிலத்திற்கு 13 மாதங்கள் நீண்ட காலம் ஆளுனர் நியமிக்கப்படாமல் இருந்தது இதுவே முதல் முறை. தமிழகத்தின் புதிய ஆளுனராக புரோகித் விரைவில் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் நேற்று பிரியாவிடை பெற்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அவரை சந்தித்து பேசினார்கள்.