Home தமிழகம் ‘கொள்ளை அடித்த ரூ.20 கோடி பணத்தை அமைச்சர் ஜெயகுமாரிடம் கொடுத்து வைத்துள்ளேன்’டி.டி.வி. தினகரன் கிண்டல்

‘கொள்ளை அடித்த ரூ.20 கோடி பணத்தை அமைச்சர் ஜெயகுமாரிடம் கொடுத்து வைத்துள்ளேன்’டி.டி.வி. தினகரன் கிண்டல்

16
0
SHARE

சென்னை அக்.3&

தான் கொள்ளையடித்தாக சொன்ன 20 கோடியை அமைச்சர் ஜெயக்குமாரிடமே கொடுத்துவைத்துள்ளேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:&

புதிதாக தமிழகத்திற்கு வருகின்ற ஆளுநராவது நடுநிலையோடு செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் யாருடனும் போய் சேரவேண்டிய அவசியம் இல்லை.

தாய்கழகம் இது, எங்களிடம்தான் எல்லோரும் வந்து சேர வேண்டும். தி.மு..வின் தரப்பில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கேட்டுள்ளனர். எனவே இன்னும் இரண்டு நாட்களில் ஆட்சி கலையும் என ஸ்டாலின் கூறியிருக்கலாம்.

எம்.ஜி.ஆரால் தான் தி.மு.க அரசு அமைந்தது பின்னர் அவரை நீக்கிய பின்பு அ.தி.மு.க கட்சி உதயமான பின்பு அந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு அராஜகங்களும், அடக்குமுறைகளும் கட்டவிழுத்துவிடப்பட்டது  என்பது உங்களுக்கு தெரியும்.

ஆனால் இன்று சசிகலாவின் தயவால் அவரே எதிர்பார்க்காத விதமாக எடப்பாடி முதல்வரானார். எப்படியும் ஆட்சி கவிழப்போகிறது அதற்குள் தன் கையில் இருக்கும் காவல்துறையை வைத்து அடக்குமுறையை கையாளலாம் என எங்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையை செயல்படுத்துகிறார்.

சசிகலாவிற்கு பரோலில் வர நிச்சயம் அனுமதிகிடைக்கும் எத்தனைநாள் என்பதை சிறைத்துறையில் முடிவு செய்வார்கள். 15நாட்கள் கேட்டுள்ளதாக் வழக்கறிஞர் கூறினார். நிச்சயம் நடராஜனைப்பார்க்க வருவார்கள். நான் கொள்ளையடித்தாக சொன்ன 20 கோடியை அமைச்சர் ஜெயக்குமாரிடமே கொடுத்துவைத்துள்ளேன். இவர்களை அமைச்சராக்கிய தாய்க்கே துரோகம் செய்கிறார்கள் என்பது தொண்டர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும்.

எங்களைப்பார்த்து குறை கூறும் அமைச்சர்கள் எல்லாம் அவர்கள் தங்களின் உடல்நிலை, மனநிலையை சோதித்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. நேற்று துக்க வீட்டிலே ஒரு அமைச்சர் வாழ்த்து சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவால் கொடுக்கப்பட்ட ஆட்சி வேண்டாம் நான் ஒரு வீரத்தமிழன் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் சட்டமன்றத்திலே உறுப்பினர்களை எல்லாம் கூட்டி ஆட்சி அமைத்தால் நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறோம்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் என்பது தற்காலிகமானதே நிச்சயம் வெகுவிரைவில் வழக்கில் வெற்றி பெற்று அவர்களை வீட்டிற்கு அனுப்புவோம்.  ஆட்சியின் உள்ள குறைகளை திசைத்திருப்புவதற்காக ஜெயலலிதாவின் மரணத்திலே சந்தேகம் உள்ளது என்று விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

ஆளுனர் வந்த பிறகு கட்சிநிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசிவிட்டுத்தான் ஆளுனரை சந்திப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here