Home மற்றவை முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதாக தினகரன், புகழேந்தி மீது வழக்கு

முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதாக தினகரன், புகழேந்தி மீது வழக்கு

4
0
SHARE

சேலம், அக். 3&

முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதாக தினகரன், புகழேந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் நெத்திமேட்டில் வசித்து வருபவர் எஸ்.. வெங்கடாசலம். முன்னாள் எம்.எல்..வுமான இவர் தினகரன் அணியில் சேலம் மாநகர், மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

கட்சி நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாதகாப்பட்டி உழவர் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார்.

துண்டு பிரசுரத்தில் அ.தி.மு.. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன், கர்நாடக மாநில அம்மா அணி செயலாளர் புகழேந்தி, ஆகியோரது படங்களும் இடம் பெற்றிருந்தது.

நீட் தேர்வால் மாணவ & மாணவிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதை விலக்குவதற்கு எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உள்பட பல வாசகங்கள் துண்டு பிரசுரித்ததில் இடம் பெற்றிருந்தன.

இது பற்றி அஸ்தம்பட்டி பகுதி அ.தி.மு.. செயலாளர் சரவணான் அன்னதானபட்டி போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் தினகரன், புகழேந்தி, பெங்களூர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.. எஸ்.கே.செல்வம்,  வெங்கடாசலம், சண்முகம், அல்லிமுத்து, பாபு, கோபால், சூர்யா, ராஜ்குமார், மகேஸ்வரி, கலைவாணி, சசி, சந்திரன், சரவணன், சாமிக்கண்ணு ஆகிய 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் தினகரன் ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை எஸ்.. வெங்கடாசலம், சூர்யா, சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி, 4 பேரை கைது செய்யப்பட்டனர். மற்றவர்களையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர்கள் 36பேர் மீதும் சட்டப்பிரிவு 143 (அதிக நபர் கூடுதல்), 120பி(கூட்டுசதி) 124(மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுதல்), 153(வன்முறை துண்டுதல் கலகம்), 500(அவதூறு பரப்புதல்), 504(பொது அமைதிக்கு பங்கம்), 506(2)(மிரட்டல்) உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

கைதான வெங்கடாஜலம் மற்றும் சூரியா, சந்திரன், கலைவாணி, ஆகிய 4 பேரும் 4&வது கோர்ட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை 15 நாள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கைதான கலைவாணி சேலம் பெண்கள் சிறையிலும் மற்ற 3 பேரும் சேலம் மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

கைதான எஸ்.. வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சேலத்தில் தினகரன் அணியை சேர்ந்த நாங்கள் கடந்த 29&ந் தேதி சேலத்தில் துண்டுபிரசுரம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். இந்த செயலை அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறி போலீசார் எங்களை கைது செய்து இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை அரசியலில் பழி வாங்கும் நடவடிக்கையாகும்.

தினரகன் அணியை சேர்ந்த எங்கள் மீது வேண்டும் என்றே அரசு எங்களின் செயல்பாட்டை முடக்கும் வகையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் ஓயாது. இது போன்ற எத்தனை வழக்குகள் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராகவே உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here