Home சுடச்சுட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உள்பட 3 வழக்குகள் மீது நாளை விசாரணைசென்னை...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உள்பட 3 வழக்குகள் மீது நாளை விசாரணைசென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதி விசாரிப்பார்

13
0
SHARE

சென்னை, அக். 3&

18 எம்.எல்..க்கள் தகுதி நீக்க வழக்கு உள்பட 3 வழக்கு மீது நாளை (புதன்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது.

ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பணிகள் மாற்றம் செய்வது வழக்கம். இதில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகளின் பணிகள் மாற்றம் செய்யப்படும்.

மதுரை கிளைக்கு அனுப்பப்பட்ட நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் பிரதான பென்ச்சுக்கு மாற்றப்படுவார்கள். அதேபோல் சென்னையில் பணியாற்றும் நீதிபதிகள் மதுரை கிளைக்கு 3 மாதங்களுக்கு மாற்றப்படுவார்கள். இதனால் அவர்கள் விசாரிக்கும் வழக்குகளும் மாற்றம் செய்யப்படுகிறது. அதனடிப்படையில் அடுத்த 3 மாதங்களுக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கான  பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் வெளியிட்டுள்ளார்.  அதன் விபரம் வருமாறு: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,  நீதிபதி எம்.சுந்தர், ஆகியோர் பொதுநல வழக்குகள், வருமான வரித்துறை சம்மந்தப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள், சர்வீஸ் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளை விசாரிப்பார்கள். நீதிபதிகள் ஏ.செல்வம், கலையரசன் ஆகியோர் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிப்பார்கள். நீதிபதிகள் சசிதரன், வேல்முருகன் ஆகியோர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பார்கள். நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாய் ஆகியோர் கிரிமினல் மேல் முறையீட்டு வழக்குகளை விசரிப்பார்கள்.

நீதிபதிசி.டி.செல்வம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிப்பார். நீதிபதி கிருபாகரன் கல்வி தொடர்பான வழக்குகளை விசாரிப்பார். நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் சமரச தீர்வு தொடர்பான வழக்குகளை விசாரிப்பார். நீதிபதி டி.ராஜா தொழிலாளர்கள் தொடர்பான ரிட் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி வைத்தியனாதன் ரிட் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ரவிசந்திர பாபு ரிட் மற்றும் இதர வழக்குகளை விசாரிப்பார்

இதில் தமிழக சட்ட பேரவையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கோரி எதிர்கட்சி தலைவர் மு..ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்..க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, தி.மு.., எம்.எல்.ஏக்களுக்கு உரிமை குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு என தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வழக்குகளை நீதிபதி துரைசாமி விசாரித்து வந்தார். இனி இந்த வழக்குகளை நீதிபதி ரவிசந்திர பாபு விசாரிப்பார். இந்த வழக்குகளில் இந்தியாவின் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிடுவது குறிப்பிடத்தக்கது. நாளை(புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணை நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here