Home சுடச்சுட வட தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும்வானிலை ஆய்வு மையம் தகவல்

வட தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும்வானிலை ஆய்வு மையம் தகவல்

14
0
SHARE

சென்னை, அக். 3&

வடதமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ராயலசீமா பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 8 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கேளம்பாக்கம், போளூரில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.