Home மற்றவை செங்கம் கிராம சபை கூட்டத்தில் 42 ஊராட்சிகளுக்கு பற்றாளர்கள் நியமனம்

செங்கம் கிராம சபை கூட்டத்தில் 42 ஊராட்சிகளுக்கு பற்றாளர்கள் நியமனம்

17
0
SHARE

செங்கம், அக். 3&

செங்கத்தில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றாது. இதில் கலெக்டரின் உத்தரவின் பேரில், 42 ஊராட்சிக்களுக்கும் தனிதனியே பற்றாளர்கள் நியமன செய்யபட்டது.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் உத்திரவின் படி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமனம் நடைபெற்றது. முன்னதாக நீப்பத்துறையில் திருவண்ணாமலை மாவட்ட ஊராக வளர்ச்சி உதவி இயக்குநர் சாந்தா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதுபோலவே செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிஎழிலன் மற்றும் திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஆகியோரது தலைமையில், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 42 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உள்ளாட்சி அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள், 42 ஊராட்சிகளுக்கும் தனித்தனியே பற்றாளர்களாக நியமனம் செய்யப்பட்டு,  அறிக்கை வெளியிடப்பட்டது. இனிவரும் காலங்களில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பற்றாளர்களின் தலைமையில், அந்ததந்த ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.