Home தமிழகம் சாலை வசதி குறித்து புகார் கிராம சபைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

சாலை வசதி குறித்து புகார் கிராம சபைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

13
0
SHARE

பெரியபாளையம், அக். 3&

பெரியபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சாலை வசதியில்லை, மழை நீர் குளம்போல் தேங்குவதாக கூறியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியின் கிராம சபைக் கூட்டம் காந்தி ஜெயந்தியான நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். பற்றாளராக எல்லாபுரம் ஒன்றிய அலுவலக தேர்தல் உதவியாளர் பிரபாகரன் கலந்து கொண்டார். கிராம நிர்வாக அதிகாரி சதீஷ் முன்னிலை வகித்தார்.  திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் (ஆதி திராவிடம் மற்றும் பழங்குடியினர் நலம்) கலைச்செல்வி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் குமரவேல், தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நடைபெற உள்ள பல்வேறு பணிகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.

அப்போது 4வது வார்டு, 5வது வார்டு மற்றும் அம்பேத்கார் நகர்ப் பகுதிகளில் சாலை வசதியில்லை, மழைக் காலங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே, இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறியதால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டன.

அதற்கு அதிகாரிகள், பொது மக்களாகிய, உங்களின் பிரச்சனையை கோரிக்கை மனுவாக ஊராட்சி செயலாளரிடம் வழங்குங்கள், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

பின்னர், கூட்டத்தை முடித்துக்கொண்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்று விட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. அதன்பின், பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here