Home இந்தியா பாலியல் துன்புறுத்தலுக்கு நானும் ஆளானேன்’ பூணம் மகாஜன் பேச்சு

பாலியல் துன்புறுத்தலுக்கு நானும் ஆளானேன்’ பூணம் மகாஜன் பேச்சு

6
0
SHARE

அகமதாபாத், அக்.3&

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும், ஏதோ ஒரு சூழ்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குற்றம் சாட்டிய பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் பூணம் மகாஜன் தானும் அந்த துன்பத்தை அனுபவித்ததாக கூறினார்.

அகமதாபாத்தில்உள்ளஐ..எம். நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பூணம் மகாஜன், இதுபோன்ற மோசமான அனுபவங்களுக்கு கரிசனை சரியான பதிலாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:&

மராட்டிய மாநிலம் வோர்லியில் இருந்து வெர்சோவாவுக்கு படிக்கச் செல்லும் போது ரயிலில்தான் செல்வேன். பூமியில் குறிப்பாக இந்தியாவில் வசிக்கும் அனைத்துப் பெண்களும் விரும்பதக்காத ஒரு துன்புறுத்தலை சந்தித்துத்தான் இருப்பார்கள்.

ஒவ்வொரு இந்தியப் பெண்ணும், தனக்கு எதிராக மோசமான விமர்சனத்தை கடந்திருக்க வேண்டும். அல்லது விரும்பத்தகாத சீண்டல்களை எதிர்கொண்டிருக்க வேண்டும்.

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களிலும் பெண் கடவுளை தொடர்புபடுத்துகிறோம். சில மரியாதையான விஷயங்களில் நாம், அமெரிக்காவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறோம்.

அமெரிக்காவில் பெண் அதிபர் இல்லை. ஆனால், இந்தியாவில் பெண் அதிபர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர், முதல்வர்கள் என பெரிய பெரிய பதவிகளில் பெண்கள் இருக்கிறார்கள்.

அவர்கள்தான் இந்த எல்லையை உடைத்தெறிய வேண்டும். இந்த மோசமான விஷயம் தொடருவதற்கு நாம்தான் காரணம். சுய பச்சாதாபம் காட்டுவது நம்முடைய தவறு. யாராவது தவறாக நடந்தால், அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்று சிந்திக்காமல், ஓங்கி ஒரு அறை விட வேண்டும்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பெண்கள் குறித்த மோசமான எண்ணம் திணிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் தொடரக் கூடாது.

இவ்வாறு பூணம் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here