Home இந்தியா பிரச்சினைகள் காங்கிரஸ் விட்டு சென்றவை ரெயில்வே துறையை அரசியல் ஆக்க வேண்டாம்மத்திய அமைச்சர் பியூஸ்...

பிரச்சினைகள் காங்கிரஸ் விட்டு சென்றவை ரெயில்வே துறையை அரசியல் ஆக்க வேண்டாம்மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வேண்டுகோள்

16
0
SHARE

மும்பை, அக்.3&

ரயில்வே துறையில் நவீன தொழில்நுட்பம் உபயோகிக்கப்படும் என்ற பியூஸ் கோயல், ரயில் துறையை அரசியல் ஆக்க வேண்டாம் எனவும், ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க இதுவே சரியான தருணம் என்றும் கூறினார்.

மராட்டியமாநிலம்மும்பையில்நிருபர்களைசந்தித்தரயில்வேதுறைஅமைச்சர்பியூஸ்கோயல்இதுகுறித்துமேலும்கூறியதாவது:&

ரயில்வே  துறையில் நிலவும் பிரச்சினைகள் புதியவை அல்ல. கடந்த கால காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விட்டு சென்றவை. இத்துறையில் உள்ள  பிரச்சினைகள் ஓராண்டு அல்லது 2 ஆண்டு பிரச்சினைகள் அல்ல.

எனினும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அவர்களின் தோல்வியை எங்கள் தோள் மீது சுமத்தி உள்ளது. சிறந்த தொழில் நுட்பத்தை அரசு அறிமுகம்  செய்யக்கூடாதா?

ரயில் பயணிகளை பாதுகாப்பான நிலையில் வைத்திருக்க கூடாதா? என்ற கேள்விகளுக்கு புல்லட் ரயிலை எதிர்ப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

ரயில்வேயை விமர்சனம் செய்யும் இத்தகைய மனநிலை கொண்டவர்களால்தான் இந்த துறை  இன்னும் 100 ஆண்டு பழைமையான தொழில் நுட்பத்தில் செயல்பட்டுக்  கொண்டிருக்கிறது. ரயில்வேயை அரசியல் ஆக்காமல், அதனை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான யோசனைகளை விமர்சகர்கள் முன் வைக்க வேண்டும். அரசியலை தாண்டி செயல்படுவதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம்.

சமீபத்தில் மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலைத் தொடர்ந்து 20 புதிய நடை மேம்பாலம் அமைக்க மத்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதே போல், மேற்கு ரயில்வே மண்டலத்தில் 10 புதிய நடை மேம்பாலங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள 40 ரயில்வே பராமரிப்பு மையங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தப்படும். இவ்வாறு பியுஷ் கோயல் தெரிவித்தார்.