Home இந்தியா மராட்டியத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை கவிழ்க்க தயங்க மாட்டேன்உத்தவ் தாக்ரே பேச்சு

மராட்டியத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை கவிழ்க்க தயங்க மாட்டேன்உத்தவ் தாக்ரே பேச்சு

8
0
SHARE

மும்பை, அக்.3&

மராட்டியத்தில் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பைசிவாஜிபூங்காவில்நடந்ததசாராவிழாவில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:&

பண மதிப்பு நீக்கத்தை ஆதரித்தவர்கள் தேசபக்தர்கள் என்றும், எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் என்றும் முத்திரை குத்தப்படுகிறது. அப்படி ஒரு சூழலை உருவாக்கிவிட்டனர்.

மின்னல் வேக துல்லிய (சர்ஜிக்கல்) தாக்குதல், பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகும் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. பிறகு எதற்காக இந்த ரூபாய் தடையை கொண்டுவந்தார்கள் என்ற மர்மம்தான் இன்றுவரை  புரியவே இல்லை.

தேசபக்தி குறித்து எங்களுக்கு பாரதீய ஜனதா பாடம் நடத்தத் தேவை இல்லை. தேசபக்தி பற்றி நாங்களும் பாடம் நடத்தும் காலம்வரும். அதற்காக பிரதமரைப் பற்றி சிவசேனா கட்சியினர் யாரும் தனிநபர் விமர்சனங்கள் செய்ய வேண்டாம்.

தேசபக்தி பற்றி கூறுபவர்கள் தான் இன்று காஷ்மீரில் பி.டி.பி. கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். எந்த கொள்கை, பந்தம் அடிப்படையில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தனர்?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இன்னமும் ஏன் நீக்கவில்லை. இந்துக்களின் வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே சிவசேனா பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தது. சிவசேனாவால் பலன் இல்லை என்று அவர்கள் கருதினால், அடுத்த கட்டத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம். நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதைச் செய்ய தவறினால் பா.ஜனதா அரசை கவிழ்க்க தயங்க மாட்டோம்.

நாங்கள் பதவி சுகத்துக்காக ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. மக்களின் தேவைகளை, விருப்பங்களை பூர்த்தி செய்யவே இருக்கிறோம். இந்த ஆட்சியில் இருந்து வெளியே வருவதற்கு நல்ல நாள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். பாரதீய ஜனதா ஆட்சியை ஆட வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here