Home மற்றவை உத்தரபிரதேசத்தில் 37 ஆண்டுகளாக சிலை கடத்தல் வழக்கை நடத்திய சி.பி.ஐ. ரூ.10 ஆயிரம்...

உத்தரபிரதேசத்தில் 37 ஆண்டுகளாக சிலை கடத்தல் வழக்கை நடத்திய சி.பி.ஐ. ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு

5
0
SHARE

புதுடெல்லி, அக். 3&

சிலை திருட்டு வழக்கை 37 ஆண்டாக இழுத்தடித்து வரும் சி.பி..க்கு கடும் கண்டனம் தெரிவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ரூ.10,000 அபராதம் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிரசித்தி பெற்ற தகஷகேஸ்வர் மகாதேவ் கோயிலில் பழங்கால துர்கையம்மன் சிலை திருடு போயிருப்பதாக தொல்லியல் துறை சி.பி..க்கு கடந்த 1981&ம் ஆண்டு கடிதம் எழுதியது. இது தொடர்பாக சி.பி.. வழக்கு பதிவு செய்து, சிலையை நியூயார்க்குக்கு கடத்த முயன்றதாக ஒருவரை கைது செய்தது. துர்க்கையம்மன் சிலை உள்ளிட்ட 14 சிலைகள் மீட்கப்பட்டன.

இதுதொடர்பான வழக்கு சி.பி.. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இறுதி வாதத்தை எட்டிய நிலையில் இந்த வழக்கு கடந்த 37 ஆண்டாக முடிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில். வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சஞ்சய் குமார், சி.பி..க்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:&

வழக்கை தொடுத்த சி.பி.. தரப்பில் ஆஜரான வக்கீல் பி.கே.சிங் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இவ்வழக்கில் வேகமாக தீர்வு காண வக்கீல் பி.கே.சிங்கிடம் வலியுறுத்தினேன். அதற்காக அவர் தயாரானார். ஆனால், அடுத்த 6 மாதத்தில் அவரை சி.பி.. இடமாற்றம் செய்திருக்கிறது.

இந்த விஷயத்தில் வக்கீலை இடமாற்றம் செய்தது ஏன் என கேட்கவில்லை. ஆனால், அதற்கு பதிலாக வேறொரு வக்கீலை நியமிக்காமல் இவ்வளவு காலமும் சி.பி.. வழக்கை முடிக்க விடாமல் இழுத்தடித்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.. விழிப்புடன் நடந்து கொள்ளவில்லை. சோம்பேறியாக இருந்துள்ள சி.பி..க்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சி.பி.. வழக்கு விசாரணை இயக்குநர், பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

விரைவில் வக்கீலை நியமித்து வழக்கை முடிக்க சி.பி..யும், உள்துறை செயலரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here