Home விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் ஆரோக்கியமான தலைவலி ஏற்படுகிறதுகேப்டன் விராட் கோலி கருத்து

வீரர்களை தேர்வு செய்வதில் ஆரோக்கியமான தலைவலி ஏற்படுகிறதுகேப்டன் விராட் கோலி கருத்து

39
0
SHARE

நாக்பூர், அக். 3&

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது திருப்தி அளிக்கிறது என்றும் அணியில் 11 வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்றும் இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 4&1 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் விராத் கோலி கூறியதாவது:&

இந்திய வீரர்களின் ஒட்டு மொத்த செயல்பாடு திருப்தி அளிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றதை சிறப்பானதாக கருதுகிறேன். அனைத்து துறைகளிலும் நாங்கள் நன்றாக செயல்பட்டோம். புவனேஷ்வர் குமார், பும்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. முகம்மது ஷமியும், உமேஷ் யாதவும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இரண்டு முழங்கை சுழற்பந்து வீரர்கள் (குல்தீப்யாதவ், யசுவேந்திர சஹால்) மிடில் ஓவரில் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த தொடரில் இந்திய அணியின் மிகப்

பெரிய சொத்தாக ஹர்த்திக் பாண்ட்யா திகழ்ந்தார். அவர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று பணியையும் சிறப்பாக செய்தார். அவரின் சிறப்பான செயல்பாடு அணிக்கு எல்லா வகையிலும் உதவியது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் எப்போதுமே நல்ல நிலையில் உள்ளனர்.

இதனால் 11 பேரை தேர்வு செய்வதில் கேப்டன் என்ற முறையில், சிறிது தலைவலி ஏற்படுகிறது. இது ஆரோக்கியமானதே. இவ்வாறு கேப்டன் விராட் கோலி கூறினார்.