Home விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி&20 தொடரில் நெக்ரா, கார்த்திக், தவானுக்கு வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி&20 தொடரில் நெக்ரா, கார்த்திக், தவானுக்கு வாய்ப்பு

24
0
SHARE

புதுடெல்லி, அக்.3&

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி.20 தொடரில், ஆசிஸ் நெக்ரா, தினேஷ் கார்த்திக் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4&1 என்ற கணக்கில் இந்திய அணியிடம் பரிதாபமாக தோற்றது.

சென்னை, கொல்கத்தா, இந்தூர் ஆகிய இடங்களில் நடந்த போட்டியில் இந்தியா வெற்றி வாகை சூடியது. பெங்களூருவில் நடந்த 4&வது போட்டியில் சரிவை சந்தித்தது. இருப்பினும் நாக்பூரில் நடந்த 5&வது மற்றும் கடைசி போட்டியில் அபாரமாக ஆடி வெற்றியை ருசித்தது. இந்த நிலையில் வருகிற 7&ந் தேதி இரு அணிகளும் மோதும் முதல் டி.20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணியில் ஆஷிஷ் நெக்ரா, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவன் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஆஷிஷ் நெக்ரா கடைசியாக பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக டி.20யில் ஆடினார். மீண்டும் ஜடேஜா, அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ரகானே, பவுலர் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் தேர்வு செய்யப்படவில்லை.

டி.20 போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:&

விராத் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ராகுல், பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யசுவேந்திர சஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெக்ரா, அக்சர் பட்டேல்.