Home இந்தியா ‘டாடா கன்சல்டன்சி’க்கு ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

‘டாடா கன்சல்டன்சி’க்கு ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

19
0
SHARE

நியூயார்க், அக். 3&

டாடா கன்சல்டன்சி நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரத்து 740 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வணிக ரகசியங்கள், தகவல்களைத் திருடியதாக 2014&ம் ஆண்டு டி.சி.எஸ். மற்றும் டாடா அமெரிக்கா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மீது எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் 2016&ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க நீதிமன்றம் டாடா கன்சல்டன்சி நிறுவனம் மற்றும் டாடா அமெரிக்கா இன்டர்

நேஷனல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு 94 கோடி டாலர் அபராதம் விதித்தது.

இந்த உத்தரவை விஸ்கான்சின் மேற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நீதிமன்றம் தற்போது அபராதத்தை 94 கோடி டாலரில் இருந்து 42 கோடி டாலராக குறைத்துள்ளது.

இந்த தகவலை டி.சி.எஸ். நிறுவனம் வெளியிட்டு உள்ளது. எனினும் இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு டி.சி.எஸ். நிறுவனத்தின் 2&வது காலாண்டு முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.