Home மற்றவை கடன் தொல்லையால் தவித்த பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த சாமியார் கைது

கடன் தொல்லையால் தவித்த பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த சாமியார் கைது

5
0
SHARE

திருச்சி, அக். 3&

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லையால் தவித்த  பெண்ணை, நிர்வாண பூஜைக்கு அழைத்த போலி சாமியார் திருச்சியில் கைது  செய்யப்பட்டார்.

திருச்சியை சேர்ந்த லலிதாம்பிகை என்ற பெண் எலக்ட்ரிக்கல் கடை  உரிமையாளர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும், கடன் தொல்லையால் சிரமப்பட்டு  வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன், தூத்துக்குடியை சேர்ந்த, சாமியார் மாரியப்பன், 45, என்பவருடன் அந்த பெண்ணுக்கு அறிமுகம் ஏற்பட்டது.

பல்வேறு இடங்களுக்கு சென்று, பரிகார பூஜைகள் செய்து வந்த மாரியப்பன்,  தொழில் விருத்திக்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடவும் பரிகார பூஜைகள்  செய்ய வேண்டும்என்று, லலிதாம்பிகையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டில் தொழில் துவங்கலாம், என்று கூறி, லலிதாம்பிகையை  நம்பவைத்து, ஐந்து லட்ச ரூபாயும் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பிக் கொடுக்க £மலும், பரிகார பூஜைகள் செய்யாமலும் ஏமாற்றி வந்த மாரியப்பன், ஜூன், 10ல்  திருச்சிக்கு வருவதாகவும், அப்போது பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார்.

அதை நம்பி, மாரியப்பன் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற லலிதாம்பிகையிடம்,  நிர்வாண பூஜை செய்தால் தொழில் விருத்தியாகும்என்று தெரிவித்துள்ளார். மேலும்,  இதற்கு சம்மதிக்காவிட்டால், ஆபத்து நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன அந்தப் பெண் அங்கிருந்து வெளியேறி, கணவன்  உதவியுடன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அதன்படி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு,  விசாரணை நடந்தது. இதற்கிடையே, மாரியப்பனின் மகள் சிதம்பரவனிதா, தெ £லைபேசியில் லலிதாம்பிகையை அழைத்து, போலீஸ் அதிகாரி என, கூறி,  மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், போலி சாமியார் மாரியப்பன், திருச்சியில் பதுங்கியிருப்பதை  அறிந்த தனிப்படை போலீசார், மாரியப்பனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில்  அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here