Home இந்தியா 71&வது சுதந்திர தினம்: நிலம், நீர், ஆகாயத்தில் எதிரிகளை தாக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு...

71&வது சுதந்திர தினம்: நிலம், நீர், ஆகாயத்தில் எதிரிகளை தாக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு தேசியக் கொடியேற்றி பிரதமர் உரை

71
0
SHARE

புதுடெல்லி, ஆக. 16&  இந்தியாவின் 71&வது சுதந்திர தினத்தையட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் உரை நிகழ்த்தியபோது நிலம், நீர், ஆகாயத்தில் எதிரிகளை தாக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் இந்திய சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில்   பிரதமர் நரேந்திர மோடி  தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதற்கு முன்னதாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நாட்டின் 71ஆவது சுதந்திர தினத்தையட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மோடி ஆற்றிய சிறப்புரையில்:ஜி.எஸ்.டி வரி முறை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி முறை அமலாவதற்காக பல்வேறு தரப்பினர் உழைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரை சொர்க்க பூமியாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

வன்முறையாலும், துப்பாக்கிச் சூட்டாலும் காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

ராணுவ வீரர்களின் சாதனைகளை தெரியப்படுத்த புதிய இணையதளம் தொடங்கப்படும். ஆதார் திட்டம் மூலமாக ஊழல் ஒழியும், வெளிப்படைத்தன்மை ஏற்படும். அரசு திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. அவை தாமதமானால் ஏழைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.தொழில்நுட்பம் மூலமாக அரசுக்கும், மக்களுக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி முறையால் உதய் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பான பலனை தந்துள்ளன.நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களை நான் வணங்குகிறேன்.

நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். இயற்கை பேரிடரால் இன்னல்களை சந்தித்து வருவது வேதனை அளிக்கிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறோம். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் நாடே மன வேதனையில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகளாகும்.ஒற்றுமை, கூட்டு முயற்சி ஆகியவற்றால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியம். புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம். மனதில் நம்பிகையை விதைத்தால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும். நாட்டில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று நிலை இல்லை.

அனைவரும் சமம். பொருள், பலம் என எல்லாம் இருந்தாலும் எண்ணம் இருந்தால் மட்டுமே செயலை செய்ய முடியும். ஊழல்வாதிகள் தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. நீர், நிலம், ஆகாயம் என எதிலும் எதிரிகளை சமாளிக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு. எல்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் ராணுவத்தின் சேவை அளப்பரியது.தொழில்நுட்ப மாற்றத்தால் வேலைவாய்ப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வேளாண்துறை வளர்ச்சிக்காக நீர்மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பயிர் காப்பீடு திட்டத்தில் 6.75 கோடி விவசாயிகள் இணைந்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முத்தலாக்கை எதிர்க்கும் பெண்களை வணங்குகிறேன், அவர்களுக்கு நான் பக்கபலமாக இருப்பேன். மகப்பேறு விடுப்பாக பெண்களுக்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. வேலைக்கு செல்வதை விட வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முத்ரா திட்டம் பெண்களுக்கு பலனளிக்கிறது. மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. புதிய திசையை நோக்கி நாட்டை வழிநடத்தி வருகிறோம்.கிருஷ்ண ஜெயந்தியும், சுதந்திர தினமும் ஒரே சமயத்தில் கொண்டாடுகிறோம் என்றார்.மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும். இந்த போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தனியாக இல்லை, நமக்கு ஆதரவு கரம் நீட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன. ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி என்று கூறினார். உரையை முடிக்கும் முன்பாக ‘ஜெய் ஹிந்த்’, ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கூறியதும் கூட்டத்தினரும் பின்னாலேயே உற்சாகமாக குரல் எழுப்பினர். மோடி தனது உரையை முடித்துக்கொண்டு காரில் கிளம்பினார், அவரது கான்வாய் பின்தொடர்ந்தது. திடீரென்று என்ன நினைத்தாரோ பள்ளி குழந்தைகள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே காரை நிறுத்தச் சொன்னார். பிரதமர் மோடியின் வாகனம் நின்ற உடனேயே மாணவர்கள் உற்சாக குரல் எழுப்பினர். காரை விட்டு இறங்கிய மோடி, தனது பாதுகாவலர்களின் பாதுகாப்பையும் மீறி மாணவர்கள் கூட்டத்திற்குள் புகுந்தார். மாணவ, மாணவிகளின் உற்சாகத்திற்கிடையே பலருக்கும் கை கொடுத்தார் மோடி. கூட்டம் அதிகாரிக்கவே, உள்ளே புகுந்த பாதுகாவலர்கள், மாணவர்களை கட்டுப்படுத்தினர்.