Home தமிழகம் விவசாயிகளின் சாகுபடிக்காக சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்தேக்கங்கள் திறக்கப்படும் முதல்வர் உத்தரவு

விவசாயிகளின் சாகுபடிக்காக சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்தேக்கங்கள் திறக்கப்படும் முதல்வர் உத்தரவு

4
0
SHARE

சென்னை, அக். 3&

சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து விவசாய சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை. திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பின் நேரடி மற்றும் மறைமுகப்

பாசனப் பரப்புகளுக்கு, பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அவர்களின் வேண்டுகோளினை ஏற்று 5.10.2017 முதல் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படும்.

இதனால், 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் . மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டுமாய்  கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here