Home சிறப்புச் செய்திகள் கால் வைக்கும் இடமெல்லாம் பாம்பு

கால் வைக்கும் இடமெல்லாம் பாம்பு

12
0
SHARE

மனிதர்களின் வசிப்பிடத்தில் பாம்புகளால் வாழ முடியும். ஆனால் பாம்புகளின் வசிப்பிடத்தில் மனிதனால் வாழ முடியுமா என்றால்.. நிச்சயமாக முடியாது என்பதற்கு, பிரேசிலில் உள்ள ஒரு தீவு உதாரணமாக உள்ளது.

மனிதன்வாழசிறிதும்தகுதியற்றஇந்ததீவின்பெயர்கெய்மாதாகிராண்டிஅல்லதுபாம்புதீவுஎன்றுஅழைக்கப்படுகிறது. காரணம் கெய்மாதா கிராண்டி தீவில் கால் வைக்கும் இடமெல்லாம் பாம்புகள் மட்டுமே நிறைந்து கிடக்கும். அதாவது ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு பாம்பு இருக்கும்.

பிரேசிலின் சாவோபவுலோ மாகாண கடற்பரப்பில் இருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில், 4,30,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள கெய்மாதா கிராண்டி தீவில், பலதரப்பட்ட காலநிலை நிலவுகிறது. இத்தீவு பாறைகள் சூழ்ந்த ஒரு மழைக்காடு. இங்கு ஒரு ஆண்டின் சராசரி  மழையளவு 135.4 மில்லி மீட்டர் ஆகும்.

கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு கிராண்டி தீவில் பயங்கர நச்சுத் தன்மை வாய்ந்த பல வகையான விஷப் பாம்புகள் வாழுகின்றன. அதிலும் மிகக் கொடிய விஷம் கொண்ட கோல்டன் பிட் என்ற பாம்பு இங்கு அதிக அளவில் வாழுகின்றன.

இங்கிருக்கும் பாம்புகளை வெளியேற்றிவிட்டு, வாழை சாகுபடி செய்ய பிரேசில் அரசு முயற்சி செய்தது. ஆனால் அங்கிருந்து பாம்புகளை வெளியேற்றுவது சாத்தியமில்லாமல் போனது. இதனால் அந்த முயற்சியை கைவிட்ட பிரேசில் அரசு பாம்புகளை பாதுகாப்பதற்காக மனிதர்கள் அங்கு செல்ல தடைவிதித்துள்ளது. ஆனால் இந்த தீவை ஆராய்ச்சி செய்ய வரும் குழுக்களுக்கு மட்டும் தீவினுள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த தீவு இருக்கும் இடத்தில் கப்பல்களை நிறுத்தக் கூடாது என்பதற்காகவும், கப்பல்கள் இந்த தீவை நெருங்காமல் விலகிச் செல்லவும், 1909&ஆம் ஆண்டு இங்கு ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. அதைக் கட்டி முடித்த பிறகு கடைசியாக மனிதர்கள் அந்த தீவை விட்டு வெளியேறிவிட்டனர்.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள்.. ஒரு தீவு முழுக்க பாம்புகள் ஆதிக்கம் செலுத்தி வாழுவதைக் கண்டால் என்ன ஆகும்..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here