Home சிறப்புச் செய்திகள் மன அழுத்தத்தை போக்கும் நவீன சிகிச்சை முறை!!

மன அழுத்தத்தை போக்கும் நவீன சிகிச்சை முறை!!

13
0
SHARE

நமது அறிவியல், மருத்துவம் மற்றும் இதிகாசத்தில், ஒலிக்கு குணப்படுத்தும் இயல்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றிற்கான சான்றுகளும் இருக்கின்றன. அமெரிக்கர்களும், ஆப்ரிக்கர்களும் மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நோய்களை குணப்படுத்தியுள்ளனர். இசையின் சின்னத்தை, சீனர்கள் மருத்துவ சின்னத்தோடு இணைத்திருப்பர்.

இரத்தஅழுத்தத்தைகுறைப்பதற்காகவும், இதய துடிப்பை சீராக்கவும் சில வகை ஒலிகள் பயன்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நம்மில் பலர் மன அழுத்தம் அதிகமாகும் தருணத்தில் நம்மை அறியாமல், இசையை கேட்க தொடங்குவோம். இசை நமது மனதை தளர்த்தி ஆசுவாசப்படுத்துகிறது என்று உணர்கிறோம்.

ஒலியின் குணப்படுத்தும் இயல்பு:

ஒலியின் குணப்படுத்தும் ஆற்றலை தெரிந்து கொள்ள ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஒருவரை கீழே அமர செய்து, அவரின் காதுகளில் ஒரு ஹெட் போன் மாட்டப்பட்டு, இசையை கேட்க செய்தனர். இந்த செயல் அவர் மனதை தளர்த்தியதாகவும், இது ஒரு தியானத்தை போல் இருந்ததாகவும் கூறினார். இசையில் உள்ள ஒலிகள் மற்றும் அதிர்வுகள் கவனத்தை ஒருங்கிணைத்தது என்றும் கூறினார். எப்படி இது சாத்தியமாகிறது? இயல்பு நிலையில், உடலில் எல்லா செயலுக்கும் பிரீக்குவேன்சி எனப்படும் அதிர்வெண்கள் இருக்கும்.

இதயதுடிப்பிற்குஒருஅதிர்வெண்உண்டு. நியூரோன்கள் எரிக்கப்படுவதற்கு ஒரு அதிர்வெண் உண்டு. தினசரி வேலை பளுவால் ஏற்படும் அழுத்தம், குறைவான தூக்கம் மற்ற வெளிப்புற காரணங்களால் இந்த இயல்பு நிலை மாறுகிறது.

ஒலி சிகிச்சை, உடல் அந்த இயல்பு நிலைக்கு மாறி சரியான அலைவரிசையில் செல்ல உதவுகிறது. இசையில் இருக்கும் அதிர்வு தூண்டல்கள், மனதை தளர்த்தி, கார்ட்டிசோல் அளவை குறைத்து வாழ்க்கை தரத்தை அதிகரிக்கிறது. கயில் காட்ஃப்ரே என்பவர் 10 வருடங்களாக பல வித சிகிச்சை முறைகளை உருவாக்கி வருகிறார். அவற்றுள் எளிய சிகிச்சை என்று அவர் கூறுவது இந்த ஒலி சிகிச்சையாகும்.

காலை , மதியம் மற்றும் மாலை நேரத்தில் மனதை தளர்த்தி ரிலாக்ஸ் செய்து கொள்ள அவர் பல அலைவரிசைகளை தானாக உருவாக்கி, இசையோடு பொருத்தி , ஒரு ஒலி காக்டைல் தயாரித்துள்ளார்.

ஒலிசிகிச்சைஎடுத்துக்கொண்டசிலநிமிடத்தில், உடல் பாராசிம்பெதிட்டிக் நிலைக்கு செல்கிறது, இது நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். ஓய்வு , பொழுபோக்கு மற்றும் மனதை தளர்த்தும் பண்பிற்கு இந்த நிலை உறுதுணையாக இருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில், அமைதி உங்கள் உடல் முழுதும் பரவுகிறது. சிகிச்சையின் கடைசி பகுதியில், உடல், மகிழ்ச்சியின் அலைவரிசையோடு இணைகிறது.

நீங்கள்எடுத்துக்கொள்ளும்சிட்டிங்கிற்குஏற்பஉங்கள்உடலும்மனமும்தளர்த்தப்பட்டுமகிழ்ச்சியுடன்இருக்கும். இந்த சிகிச்சையின் குறிக்கோள், தலையில் உள்ள பாரத்தை இறக்கி, பாதங்களை லேசாக்கி, நல்ல மன நிலையை தருவது தான். இந்த சிகிச்சை முடிந்து வெளியில் செல்லும்போது, அந்த நாளை வெற்றிகரமாக கையாள முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் வரும். 15 நிமிடம் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் 2 & 10 மணிநேரம் இதன் தாக்கம் இருக்கும்.

இந்த சிகிச்சையின் பயணத்தில் நாம் பல வித அனுபவங்களை கடப்போம். நமது உடல் மிதப்பது போல் மிகவும் லேசாக உணரப்படும். இந்த தியானத்தில் இருந்து கண் விழிக்கும்போது நமது உதடுகள் தானாக புன்னகையை சுமந்து இருக்கும். மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு நடைமுறை பயிற்சியாக இருக்கும். இந்த சிகிச்சைக்கான மையங்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 மையங்கள் இந்த நகரத்தில் உள்ளன. ஒவ்வொரு சிட்டிங்கிற்கு 15 டாலர்கள் வசூலிக்கப்படுகின்றன..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here