Home உலகம் 100 மில்லியன் டாலர் செலவில் துபாயில் உருவாகும் ‘செவ்வாய் உலகம்’

100 மில்லியன் டாலர் செலவில் துபாயில் உருவாகும் ‘செவ்வாய் உலகம்’

28
0
SHARE

துபாய், அக்.2&

100 மில்லியன் டாலர் செலவில், துபாயில் செவ்வாய் கிரகத்தின் மாதிரியை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்றான துபாயில் ஏற்கனவே சுற்றுசூழலுக்கு எள்ளவும் தீங்கு இல்லாத பசுமை வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தற்போது செவ்வாய் உலகத்தின் மாதிரியை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து பார்ப்போம்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ் நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில சர்வதேச தனியார் நிறுவனங்கள் அங்கு புதிய காலனி அமைத்து அங்கு மனிதர்களை குடியேற்ற முயற்சி மேற்கொண்டு வருவதும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவதும் அறிந்ததே.

தற்போது இத்தகைய நடவடிக்கையில் ஐக்கிய அமீரகம் (யூ...) நாடுகள் இறங்கியுள்ளது. இதற்காக துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி உலகம் உருவாக்கப்பட உள்ளது.

19 லட்சம் சதுர அடி பரப்பளவில் ராட்சத கூண்டு அமைக்கப்பட்டு இந்த செவ்வாய் உலகம் அமைக்கப்பட உள்ளது. இது துபாயின் மையப் பகுதியில் பாலைவனத்தில் உருவாக்கப்படுகிறது.

அதற்காக ரூ.879 கோடி (100 மில்லியன் டாலர்) செலவிட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்குசெவ்வாய் கிரக அறிவியல் நகரம்என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு இந்த வாரத்தில் நடைபெற உள்ள ஐக்கிய அமீரக நாடுகளின் கூட்டத்தில் வெளியாக உள்ளது.

இந்த மாதிரி உலகத்தில் மனிதர்களை தங்க வைத்து செவ்வாய் கிரகத்தில் வாழக் கூடிய சூழ்நிலை பயிற்சி உருவாக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் வெளி உலகத்தை அறியா வண்ணம் ஒரு வருடம் தங்கியிருக்க வேண்டும்.

மாதிரி உலகத்துக்குள் தங்கியிருப்பவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும்.

இது குறித்து துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபருமான மன்னர் ஷேக் முகமது பின் ராஷீத் கூறியதாவது:& செவ்வாய் கிரகத்தில் மக்களை தங்க வைக்கும் முயற்சியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அதற்கு முன்னோடியாக விளங்க ஐக்கிய அமீரகம் விரும்புகிறது. அதற்கான முயற்சியே இத்தகைய நடவடிக்கையாகும். இன்னும் 100 ஆண்டுகளில் அதாவது 2117ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.