Home உலகம் உலகை சுற்றி..!*

உலகை சுற்றி..!*

8
0
SHARE

 ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் மீது 2009&ம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது மஹ்மத் அல் பரேக், பாகிஸ்தானில் பயிற்சி பெற்று, கனடா நாட்டில் படிப்பது தெரியவந்தது. அவர் மீதான வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து உள்ளது. தண்டனை விவரம் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

* அமெரிக்காவில் உள்ள பள்ளி நூலகங்களுக்கு அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா புத்தகங்களை நன்கொடையாக கொடுத்து வருகிறார். இந்த புத்தகங்களை கேம்ப்பிரிஜ்ட்போர்ட் பள்ளி திருப்பி அனுப்பி உள்ளது. இதுமட்டுமின்றி அந்த நூலகர், டிரம்ப் இனவெறி கொள்கையை தூக்கி பிடிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

* போலியான புகைப்படத்தை காட்டி ஐ.நா.வில் அனுதாபம் தேட முயன்ற பாகிஸ்தான் மூக்குடைப்பட்ட நிலையில் தற்போது இந்திய வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி 3 வீரர்களை கொன்றுவிட்டதாக நீலிக்கண்ணீர் வடித்து உள்ளது.

* சிரியாவின் இத்லிப் மாகாணம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 28 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து விட்டதாக மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்து உள்ளது.

* ஊழல் குற்றச்சாட்டில் பதவியை இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாளை (செவ்வாய்கிழமை) அவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here