Home சினிமா ஜி.வி.யும், சீமானும் இணையும் புதிய படம்

ஜி.வி.யும், சீமானும் இணையும் புதிய படம்

26
0
SHARE

இயக்குனர் சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த செய்தி. இப்போது படப்பிடிப்பு தொடங்க முடியாதபடி சீமானுக்கு வெளி படங்களில் நடிக்க அழைப்பு வந்து கொண்டு இருக்கிறதாம். சமீபத்தில் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம்அடங்காதே’.

சென்னை, வாரணாசி, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படத்தில் சரத்குமார், மந்திரா பேடி,சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இவர்கள் கூட்டணியில் தற்போது சீமானும் இணைந்திருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பில் ஜி.வி.பிரகாஷ், சீமான் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.