Home சினிமா கார்த்திக்&கௌதம்கார்த்திக் முதல் முறையாக இணையும் புதிய படம்‘

கார்த்திக்&கௌதம்கார்த்திக் முதல் முறையாக இணையும் புதிய படம்‘

21
0
SHARE

இவன்தந்திரன்என்ற வெற்றி படத்திற்கு பிறகு கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ்&டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தங்களின் புதிய படதுவக்கம் பற்றி அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.‘நான் சிகப்புமனிதன்பட இயக்குனர் திருவின் இயக்கத்தில், ‘நவரசநாயகன்கார்த்திக், கௌதம்கார்த்திக் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படம் விரைவில் தொடங்க இருக்கிறது.

ரங்கூன்’, ‘இவன்தந்திரன்படங்களின் வெற்றிக்கு பின் கடந்த வாரம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்ஹரஹரமஹாதேவிதிரைப்படங்களுக்குப்பின் கௌதம்கார்த்திக் தன் தந்தையுடன் முதல்முறையாக நடிக்கும் படம் இது.

பல வருடங்களுக்குப்பிறகு ஒரு பிரபல கதாநாயகனும் அவரின் மகனும் இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகிறது.கார்த்திக்கை அவரின் மகனுடன் இணைந்து நடிக்கும்படி பலர் கேட்டும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.ஒரு நல்ல கதை இருந்தால் மட்டுமே இணைந்து நடிப்பதாக இருந்தவர் இயக்குனர் திரு கதை சொல்லியதுமே நடிக்கசம்மதம் தெரிவித்தார்.

அனேகன்திரைப்படம் மூலம் மீண்டும் பெரிய வரவேற்பை பெற்ற கார்த்திக் தற்போது சூர்யா இணைந்து இயக்குனர் விக்னேஷ்சிவன் படமானதானாசேர்ந்தகூட்டத்தில்நடித்து வருகிறார். கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இப்படத்தில் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். அவர்களுடன் இரண்டு பிரபல கதாநாயகிகளும் மேலும் பல பிரபல நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின்தலைப்புமுடிவுசெய்யப்பட்டுவிரைவில்அறிவிக்கப்படும்.மேலும் இப்படத்தின் தொழில் நுட்பகலைஞர்கள் விவரங்களும் தெரிவிக்கப்படும்.  கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் ஒட்டுமொத்தமாக தேதிகளை கொடுத்துள்ளனர்.எனவே ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இயக்குனர் மற்றும் தயாரிப்பு குழு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சிறந்த கதைகளை என்றுமே ஆதரித்து வரவேற்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு நல்ல கதை மற்றும் சிறப்பான நடிகர்கள் கொண்டுள்ள இப்படத்தை மிகவும் ரசிப்பார்கள் என்று இந்த திரைப்படகுழுமம் நம்புகிறது.

திரைப்படம்,தொலைக்காட்சி மற்றும் இணையதள  மீடியாக்களில் கால் பாதிக்கும் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா என்ற புதிய மீடியா நிறுவனத்திற்காக கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ்&டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.