Home விளையாட்டு வோடபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 13,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வோடபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 13,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

8
0
SHARE

கோவை, அக். 2 &

வோடபோன் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்ச்சியில் 13,500க்கும் மேற்பட்டோட் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர் ரன்னர்ஸ், ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் மற்றும் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர் தடகள சங்கம், ஆகியவற்றுடன் வோடாபோன் இணைந்து இந்த வோடாபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017 நிகழ்ச்சியை நடத்தியது.

முதலாம்போட்டியான 21.1 கி.மீ (அரை மாரத்தான்) பந்தயத்தை காலை 5.00 மணிக்கு கோயம்புத்தூர் கேன்சர் பவுன்டேஷன், நிர்வாக அறங்காவலர் டாக்டர்.டி.பாலாஜி கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 2000 நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில், வெல்லிங்டனை சேர்ந்த ஆர். பத்மநாபன் முதலிடத்தை பெற்றார். இரண்டாமிடத்தை ஜி.என்.வினோத் பிடித்தார்.

மூன்றாமிடத்தை டி.நிகில் பிடித்தார். பெண்கள் பிரிவில் வசந்தா மணி முதலிடத்தை பிடித்தார். கே.சுகுணா இரண்டாமிடத்தை பிடித்தார். வி.சோனியா மூன்றாம் இடம் பிடித்தார்.

மூத்தோர்ஆண்கள்பிரிவில்முகமதுஇட்ரிஸ்முதலிடத்தைபிடித்தார். போஸ்கோ இரண்டாமிடத்தை பிடித்தார். நஞ்சுன்டன் மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் மீனாட்சி சங்கர் முதலிடத்தை பிடித்தார்.

ஊர்மிளா சுரானா இரண்டாமிடத்தை பிடித்தார். தொடர்ந்து ரக்ஷனா பட்டேல் மூன்றாமிடத்தை பிடித்தார்.

இரண்டாம் போட்டியான 10 கி.மீ மாரத்தான் பந்தயமானது காலை 6.00 மணிக்கு துவங்கியது.  இதை வோடாபோன் தமிழ்நாடு துணைத் தலைவர் (மார்க்கெட்டிங்), மணிஷ் சிங்கால் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 4,700 பேர் கலந்து கொண்டார்கள். இதில் ஆண்கள் பிரிவில் பி.கிரண் முதலிடத்தையும், எம். ராஜ்குமார் இரண்டாமிடத்தையும், சுரேஷ்குமார் மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் பானுப்பிரியா முதலிடத்தையும், திவ்ய லட்சுமி இரண்டாமிடத்தையும், எஸ்.கிருத்திகா மூன்றாமிடத்தை பிடித்தார்.

மூத்தோர் ஆண்கள் பிரிவில் டி.எம்.நாராயணன் முதலிடத்தையும், பி. பாண்டுரங்கன் இரண்டாமிடத்தையும், ஜெயகுமார் மூன்றாமிடத்தையும் பிடித்தார்.

மூன்றாம்போட்டியான 5 கி.மீ மாரத்தான் பந்தயமானது காலை 7.00 மணிக்கு துவங்கியது. இதை வோடாபோன் கோயம்புத்தூர், மண்டல தலைவர், நவீன் சந்தரன் நாயர்  கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 7,100 பேர் கலந்து கொண்டு ஓடினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here