Home இந்தியா குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

11
0
SHARE

புது டெல்லி அக் 2

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய குடியரசுத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஷ்ட்ரபதி ஜி. நீங்கள் நலமுடன் நீண்ட நாட்கள் நாட்டு மக்களுக்கு சேவை செய்து வாழ வேண்டும். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 125 கோடி மக்களின், முக்கியமாக ஏழைகளின் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் அபிமானங்களை பெற்றுள்ளார்.

குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும் முன்னரே மக்கள் மத்தியில் தனது எளிமையாலும், கருணையாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here