Home இந்தியா என்னைப் பற்றி மலிவான கருத்துகளை அருண் ஜெட்லி கூறியுள்ளார் யஷ்வந்த் சின்ஹா...

என்னைப் பற்றி மலிவான கருத்துகளை அருண் ஜெட்லி கூறியுள்ளார் யஷ்வந்த் சின்ஹா குமுறல்

9
0
SHARE

புதுடெல்லி அக்2

என்னைப் பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ள கருத்து மலிவானது. நிதியமைச்சராக நான் ஆற்றிய பணிகள் குறித்து அவர் விமர்சித்திருப்பது உண்மையில் என்னிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் குறித்து தெரிவிக்கப்பட்ட விமர்சனமாகும்என்று பா..க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றில் யஷ்வந்த் சின்ஹா அண்மையில் எழுதிய கட்டுரையில் நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். ரூபாய் நோட்டு வாபஸ், ஜி.எஸ்.டி வரிவிதிப்பை சரிவர அமல்படுத்தாதது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “தனது 80ஆவது வயதில் பதவியைத் தேடி விண்ணப்பிக்கிறார் யஷ்வந்த் சின்ஹா. முன்னாள் நிதியமைச்சர் என்ற வசதியைப் பயன்படுத்தி குறைகூறக் கூடாதுஎன்று தெரிவித்திருந்தார். ஜெட்லியின்

இந்தக் கருத்து குறித்து யஷ்வந்த் சின்ஹா, டெல்லியில் பி.டி.ஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் 80 வயதில் பதவியைத் தேடி அலைவதாக அருண் ஜெட்லி கூறியிருப்பது மிகவும் மலிவான கருத்து. அது எனது கண்ணியத்துக்குக் குறைவானது என்று நான் கருதுவதால் அதற்குப் பதிலளிக்கப் போவதில்லை.நான் ஐ..எஸ். அதிகாரியாக இருந்தபோது எனது பணிக்காலம் முடிவடைவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே ராஜிநாமா செய்தேன். அரசியலில் ஈடுபடுவதற்காக அதைச் செய்தேன்.

அதேபோல், 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்ற நிலை இருந்தபோதிலும், நானாகவே விரும்பி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினேன். தேர்தல் சார்ந்த அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று நான் விரும்பியதால் அந்த முடிவை எடுத்தேன்.அருண் ஜேட்லி எனது பின்னணியை முற்றிலுமாக மறந்து விட்டார். வி.பி.சிங் அமைச்சரவையில் கடந்த 1989இல் என்னை இணையமைச்சராக்க முன்வந்தபோது சில காரணங்களால் அதை ஏற்க நான் மறுத்து விட்டேன்.

தற்போது நான் தேர்தல் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டேன். இப்போது நான் ஒரு பதவியை விரும்பியிருந்தால், தேர்தல் போட்டியிடுவது போன்ற அனைத்தையும் கைவிட்டிருக்க மாட்டேன்.வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்  நான் நிதியமைச்சராக இருந்தபோது எனது பணி குறித்து ஜெட்லியும், மற்ற பாஜக தலைவர்களும் இப்போது விமர்சிக்கின்றனர். எனக்கு அப்போது மிக முக்கியமான வெளியுறவுத்துறையும் அளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்ற பிறகு, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் மோதல் போக்கு காணப்பட்டது.

அப்போது அத்துறை என்வசம் ஒதுக்கப்பட்டது.எனவே, நிதித்துறையில் இருந்து எந்தப் பயனுமில்லாத வெளியுறவுத்துறைக்கு நான் மாற்றப்படுவதாக இப்போது முன்வைக்கப்படும் விமர்சனம் முரணாக உள்ளது. எனது பதவிக்காலத்தைப் பற்றி பாஜகவினர் மேற்கொள்ளும் விமர்சனமானது அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மீதான விமர்சனமாகும் என்றார் யஷ்வந்த் சின்ஹா.

இதனிடையே, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பா..க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா முன்வைத்துள்ள விமர்சனம் குறித்து, பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கமளிக்க வேண்டும் என்று அக்கட்சி எம்.பி. சத்ருகன் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here