Home இந்தியா ஆப்பிரிக்கநாடுகளுக்கு ராம்நாத் கோவிந்த் பயணம்

ஆப்பிரிக்கநாடுகளுக்கு ராம்நாத் கோவிந்த் பயணம்

11
0
SHARE

புதுடெல்லி, அக். 2&

அக்.3ஆம் தேதி ஆப்பிரிக்க நாடுகளுக்கு ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசு முறைப் பயணமாக, ஜிபெஜட்டி, எத்தியோப்பியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு வரும் 3ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறார். அவர், குடியரசுத்தலைவராகபொறுப்பேற்றபிறகுமேற்கொள்ளஇருக்கும்முதல்

வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இந்த 4 நாள் பயணத்தில், ஆப்பிரிக்க நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுதொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான இணைச் செயலர் நீனா மல்ஹோத்ரா, குடியரசுத்தலைவரின்ஊடகச்செயலர்அசோக்மாலிக்ஆகியோர்செய்தியாளர்களைசனிக்கிழமை

சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஜிபெஜட்டி, இந்தியாவின் முக்கியக் கூட்டாளியாகும்.

இந்தியாஜிபெஜட்டி இடையே, கடந்த 2016 17ஆம் ஆண்டில், 28.4 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. எனவே, குடியரசுத்தலைவர்ராம்நாத்கோவிந்த்தனதுமுதல்வெளிநாட்டுப்பயணமாகஆப்பிரிக்க

நாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

அவர் இந்தப் பயணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார். ஜிபெஜட்டியில் சிமென்ட் ஆலை கட்டுவதற்காக, அந்நாட்டுக்கு 4.8 கோடி டாலர் அளவுக்கு இந்தியா கடனுதவி அளித்துள்ளது.ஜிபெஜட்டியைத் தொடர்ந்து, எத்தியோப்பியாவுக்கு ராம்நாத் கோவிந்த் செல்லவிருக்கிறார். இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர், 45 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தியோப்பியா செல்வது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு, கடந்த 1972ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, எத்தியோப்பியா சென்றார்.தான்சானியா, மொசாம்பிக், மால்வாய், எத்தியோப்பியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து இந்தியா பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வருகிறது. நிகழாண்டில் இந்தியாவில் பருப்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி செய்வது வெகுவாகக் குறையும்.

எனவே, இந்தப் பயணத்தின்போது, பருப்பு வகை இறக்குமதி தொடர்பாக, இந்தியாஎத்தியோப்பியா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது.இந்தப் பயணத்தின்போது, ஜிபெஜட்டி, எத்தியோப்பியாஆகியநாடுகளில்

இந்தியச்சமூகத்தினரை

ராம்நாத் கோவிந்த் சந்தித்துப் பேசுகிறார். உடன் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார் என்று நீனா மல்ஹோத்ரா, அசோக் மாலிக் ஆகியோர் கூறினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here