Home இந்தியா குஜராத் சட்டசபை தேர்தல் எதிரொலி 57 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

குஜராத் சட்டசபை தேர்தல் எதிரொலி 57 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

24
0
SHARE

அகமதாபாத்: அக் 2

குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 57 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.

இடஒதுக்கீடு கேட்டு போராடிய பட்டேல் சமூகத்தினர் வாக்குகளை குறிவைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குஜராத் அரசு. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் 57 .பி.எஸ் அதிகாரிகளை அம்மாநில அரசு அதிரடியாக இடம் மாற்றம் செய்துள்ளது. இவர்களில் சிலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.