Home அரசியல் காங்கிரசிலிருந்து விலக மாட்டேன் நடிகை குஷ்பு பேட்டி

காங்கிரசிலிருந்து விலக மாட்டேன் நடிகை குஷ்பு பேட்டி

32
0
SHARE

சென்னை, அக். 2&

தி.மு..வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு அகில இந்திய காங். செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் இருந்தது வரை குஷ்பு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து கட்சி பணிகளில் தீவிரம் காட்டினார். இளங்கோவன் மாற்றப்பட்ட பிறகு அவர் அங்கு வருவதில்லை.இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் திருநாவுக்கரசர் கோஷ்டியினர் குஷ்புவை ஓரம் கட்டியுள்ளனர்.

காங்கிரசில் தீவிர உறுப்பினர் என தேர்வு செய்யப்பட்டால்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது.ஆனால் கட்சியின் தீவிர உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு இல்லை. மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவியும் வழங்கப்படவில்லை. எனவே காங்கிரசில் நீடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் குஷ்பு இருப்பதாக கூறப்பட்டது.ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதை ஆதரித்தும் சமீபத்தில் குஷ்பு கருத்து தெரிவித்தார். அவர்கள் கட்சி ஆரம்பிக்கும் வரை காங்கிரசிலேயே நீடிக்கலாம்.

அதன்பிறகுகாங்கிரசில்இருந்துவிலகிஅவர்களின்கட்சியில்சேருவதுதொடர்பாகமுடிவுஎடுத்துக்கொள்ளலாம்என்றுகுஷ்புதனதுஆதரவாளர்களிடம்கூறிஇருப்பதாககூறப்பட்டது.இது தொடர்பாக குஷ்புவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:நான் காங்கிரசில் இருந்து விலகப் போவதாக வந்துள்ள தகவல் பொய்யானது. முற்றிலும் உண்மைக்கு மாறானது. வேலை வெட்டி இல்லாமல் இருந்தால் சாத்தான் எதையாவது செய்யும் என்பார்கள். அதே போலத்தான் வேலை வெட்டி இல்லாதவர்கள் இந்த வதந்தியை பரப்பி இருக்கிறார்கள்.எப்போதுமே காங்கிரசுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்களின் பொய்யான பிரசாரம் இது. காங்கிரசில் இருந்து நான் விலகுவேன் என்ற பேச்சுக்கு வாய்ப்பே இல்லை.இனிமேல் அரசியலை விட்டு விலகினாலும் காங்கிரசை விட்டு ஒரு போதும் விலக மாட்டோம். வேறு எந்த கட்சிக்கும் செல்லவும் மாட்டேன். சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு செய்தியை பரப்பி விட்டிருப்பதை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது.இவ்வாறு அவர் கூறினார்.