Home சிறப்புச் செய்திகள் இளைஞர்களுக்கான ஹாம் வானொலி

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி

24
0
SHARE

இணையம் வந்த பின் ஹாம் வானொலிக்கானத் தகவல்கள் ஏராளம் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் அவை எங்கு கிடைக்கின்றன? அவற்றை எப்படி நாம் அறிந்து கொள்வது? எந்த பக்கத்திற்கு சென்றால் நமக்குத் தேவையானத் தகவல்கள் கிடைக்கும்? என்பன போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே நம்பகமான இணைய தளத்திற்கு சென்று பார்ப்பது நல்லது.

ஹாம் வானொலியும் மின் அஞ்சலும்

இன்று பல்வேறு ஹாம் வானொலிக்கான மின் அஞ்சல் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அவை அனைத்தும் ஏதேனும் ஒரு விதத்தில் நமக்கு நன்மை கொடுப்பவைகளாக உள்ளன. சர்வதேச அளவில் இரண்டு முக்கியக் குழு, புகழ்பெற்று விளங்குகிறது. ஈஹாம் (ஷ்ஷ்ஷ்.மீலீணீனீ.ஸீமீt) என்ற இணைய தளமானது ஒரு ஹாம் வானொலிக்கான மின் அஞ்சல் குழுவை நடத்தி வருகிறது. பொதுவாகவே  இந்த இணைய தளத்தில் பல்வேறு புதிய ஹாம் வானொலிப்பெட்டிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதன் ஊடாக நாம் பெரும் தொகை வைத்து வானொலிப் பெட்டி வாங்கும் முன், அந்த வானொலிப் பெட்டியை வாங்கிப் பயன்படுத்துவோர், அந்த குறிப்பிட்ட வானொலிப் பெட்டி பற்றி என்ன கூறியுள்ளனர், என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானது. இந்த இணைய தளத்தினை நடத்துபவர்கள், ஒரு அருமையான, பயனுள்ள மின் அஞ்சல் குழுவை நீண்ட நாட்களாக நடத்தி வருகின்றனர்.

ஹாம் வானொலி உரிமம் பெற்றவுடன், பெரும்பாலோர் இந்த இணைய தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்வது வழக்கம். அதற்கு காரணம், உலகம் முழுவதும் உள்ள ஹாம்கள் ஒரே இணையத்தில் சங்கமிக்கும் ஒரு இடம் உண்டு என்றால், அது இந்த க்யூ.ஆர்.இசட் இணையதளம் மட்டுமே (ஷ்ஷ்ஷ்.ஹீக்ஷீக்ஷ்.நீஷீனீ). இந்த இணைய தளமும் ஒரு மின் அஞ்சல் குழுவை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு பயனுள்ளத் தகவல்கள் தொடர்ந்து இதன் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது போன்ற நம்பகமான இணைய தள குழுக்களில் உறுப்பினர் ஆவதன் ஊடாக  தேவையானத் தகவல்களை மட்டுமே நமக்கு அனுப்பப்படுகிறது.

ஹாம் திருவிழாக்கள்

ஆங்கிலத்தில் பிணீனீயீமீst என்று அழைக்கப்படும் ஹாம் திருவிழாக்கள், உண்மையிலேயே ஹாம் வானொலியைப் பற்றி அறிந்துகொள்பவர்களுக்கும், ஹாம் வானொலிக்குள் வர நினைப்பவர்களுக்கும், பல்வேறு பயனுள்ளத் தகவல்களை வழங்குகிறது. ஹாம் வானொலி திருவிழாக்களில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்படும். ஹாம் வானொலித் தொடர்பான கண்காட்சி பல புதிய தொழில்நுட்பங்களை நமக்கு நிச்சயம் அறிமுகப்படுத்தப்படும். பல ஹாம் வானொலிக் கடைகள் ஒரே இடத்தில் இருப்பதால், பல்வேறு பொருட்களை காணவும் வாய்ப்பு உண்டு. பழைய ஹாம் வானொலிப் பெட்டிகளுக்குத் தேவையான பொருட்களும் இது போன்ற திருவிழாக்களில் கிடைக்கும்.

ஹாம் திருவிழா இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஊரில் நடத்தப்படுகிறது. 2017&ம் ஆண்டிற்கான ஹாம் திருவிழா கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. ஹாம் திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். தேவையான தொகையை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சில சமயங்களில், கிடைத்தற்கு அரிய பொருட்கள் இது போன்ற கூட்டங்களில் கிடைக்கும். அரிய பொருட்கள் கிடைக்கும் பொழுது வாங்குவது உத்தமம். காரணம், அடுத்த முறை இதேப் பொருள் அதே தரத்துடன் கிடைக்குமா என்பது சந்தேகமே. கையுடன், உங்களின் ஹாம் வானொலி உரிம நகல்களை வைத்துக்கொள்வது அவசியம். மேலும் உங்களிடம் சிறிய ஹாம் வானொலிப் பெட்டி இருந்தால் அதனையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்.

ஹாம் திருவிழாக்களுக்கு செல்பவர்கள் ஒரு சில தகவல்களை மனதில் நிறுத்திச் செல்வது நல்லது. பார்க்கும் அனைத்துப் பொருட்களையும் வாங்கத் தோன்றும். ஆனால், அவை அனைத்தினையும் வாங்கிவிடக் கூடாது. நீங்கள் வாங்க நினைக்கும் பொருள், உங்களுக்கு அவசியம் தேவையானதா? அந்த பொருள் இல்லாமல் உங்கள் ஹாம் வானொலியை இயக்க முடியாதா? நீங்கள் வாங்கும் விலையில் அந்த பொருள் உள்ளதா? போன்றவற்றை யோசித்து வாங்குவது நல்லது.

ஹாம் திருவிழாக்களில், ஒரு அனுபவம் மிக்க ஹாமை உங்கள் அருகில் வைத்துக்கொள்வது நல்லது. அவருக்கு எந்த பொருள், எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். மேலும், அதிக விலை கொடுத்து ஏமாந்து விடுவதற்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். பொதுவாகவே, இது போன்ற இடங்களில், விலையைக் குறைத்து தர விற்பனையாளர்கள் தயாராக இருப்பர். காரணம், அவர்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு தான் வந்துள்ளனர். அதனால், குறைந்த லாபம் கிடைத்தாலும் பொருட்களை கொடுத்துவிடுவர்.

ஹாம் வானொலிக்கு தேவையான உதிரிப்பாகங்கள் வாங்க, ஹாம் திருவிழாக்கள் தான் ஒரு நல்ல இடம். காரணம், அனைத்து முன்னணி ஹாம் வானொலிப்பெட்டி விற்பனையாளர்களும் ஸ்டால்களை அமைத்திருப்பர். குறிப்பாக, பேட்டரிகள், இது போன்ற இடங்களில் குறைவான விலைக்கு கிடைக்கும். மேலும் வாங்கும் வானொலிப் பெட்டிகளை நேரடியாக சோதனை செய்து பார்த்துக்கொள்ளவும், இந்த இடங்கள் வாய்ப்பாக அமையும்.

முடிந்தமட்டும், பழைய அரிதான வால்வ் வானொலிப் பெட்டிகளை வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். காரணம், அந்த வானொலிப் பெட்டிக்கான உதிரிப்பாகங்கள் கிடைப்பது மிகவும் கடினம். மேலும் நீங்கள் வானொலிப் பெட்டிகள் வாங்காவிட்டாலும், அங்கு எந்த மாதிரியான கடைகள் வந்துள்ளன. அவர்கள், எந்த விதமான பொருட்களை விற்கின்றனர். சந்தையில் எந்த விதமான வானொலிப் பெட்டிகள் அனைத்து ஹாம்களாலும் விரும்பி வாங்கப்படுகிறது, போன்ற விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

முடிந்த வரை அதிக எடை கொண்ட பொருட்களை வாங்க வேண்டாம். குறிப்பாக டிரான்ஸ்பார்மர் போன்றவை. அவை உங்களின் பயணத்தினை சிரமம் ஆக்கிவிடக்கூடும். ஒரு பொருளை நீங்கள் வாங்குவது என முடிவு செய்துவிட்டால், அந்த பொருளை ஏற்கனவே வாங்கியவர் என்ன கூறுகிறார் என்று அறிந்த பின் வாங்குவது நல்லது. மேலும், அந்த பொருளின் விமர்சனத்தினை இணையத்தில் படித்துவிடுவது நல்லது.

முடிந்த மட்டும், இது போன்ற ஹாம் திருவிழாக்களில் ஏதேனும் ஒரு பொருளை வாங்க திட்டமிடுங்கள். காரணம், இணையத்தில் வாங்கும் பொழுது, அதற்கு அஞ்சல் செலவினையும் சேர்த்து கட்டவேண்டியிருக்கும். மேலும் பொருள் பாதுகாப்பாக உங்களை வந்து சேரும் வரை நமக்கு திக் திக் என்று இருக்கும். ஹாம் திருவிழாவில் உள்ள கடைகளில் டேபிளுக்கு கீழே என்ன வைத்திருக்கிறார்கள் என்று ஒரு நோட்டம் மறவாமல் விடுங்கள். காரணம், அங்கு ஒரு சில அரிதான, உங்களுக்கு தேவையான பொருள் இருக்கக்கூடும்.

இந்தியாவில் நடக்கும் ஹாம் திருவிழாக்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் பிணீனீயீமீst மிஸீபீவீணீ என்று கூகிள் ஸ்சேர்ச் செய்து விரிவாக அறிந்துகொள்ளலாம். இந்த வருட ஹாம் திருவிழாவை பற்றி ஷ்ஷ்ஷ்.லீணீனீயீமீstவீஸீபீவீணீ.நீஷீனீ எனும் இணைய முகவரியில் விரிவாக அறிந்து கொள்ளலாம். கொல்கத்தாவில் வரும் 16,  17 டிசம்பர் 2017ல் இந்த வருடத்திற்கான ஹாம் திருவிழா நடைபெறவுள்ளது. உலகெங்கும் நடக்கும் ஹாம் திருவிழாக்களை அறிந்து கொள்ள ஷ்ஷ்ஷ்.பீஜ்நீஷீஸீஸ்மீஸீtவீஷீஸீ.நீஷீனீ, ஷ்ஷ்ஷ்.ணீக்ஷீக்ஷீறீ.ஷீக்ஷீரீ/லீணீனீயீமீstணீஸீபீநீஷீஸீஸ்மீஸீtவீஷீஸீsநீணீறீமீஸீபீணீக்ஷீ, ஷ்ஷ்ஷ்.ஷ்9பீஜ்நீநீ.நீஷீனீ, ஷ்ஷ்ஷ்.ஷ்ஷ்பீஜ்நீ.ஷீக்ஷீரீ, ஷ்ஷ்ஷ்.sஸ்லீயீs.ஷீக்ஷீரீ மற்றும் ஷ்ஷ்ஷ்.tணீஜீக்ஷீ.ஷீக்ஷீரீ ஆகிய இணைய முகவரிகளை காணலாம்.

ஹாம்வென்சன்

ஹாம் வானொலி திருவிழாவில் உலகப் புகழ்பெற்ற திருவிழாவாக கருத்தப்படுவது இந்தஹாம்வென்சன்’ (ஷ்ஷ்ஷ்.லீணீனீஸ்மீஸீtவீஷீஸீ.நீஷீனீ) ஆகும். உலகின் புகழ்பெற்ற ஹாம்கள் அனைவரும் ஒன்று சேரும் இடம் தான் இந்த ஹாம்வென்சன். அமெரிக்காவின் டேடன் நகரில் நடந்துவரும் இந்த திருவிழா ஒரு விதத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்.  வானொலி நேயர்கள் ஒவ்வொருவரும், தனது வாழ்வில் ஒரு முறையாவது இந்தத் திருவிழாவிற்கு சென்று வரவேண்டும் என ஆர்வம் கொண்டிருப்பர். 2017&ஆம் வருடத்தின் ஹாம்வென்சன் 19 முதல் 21 மே வரை நடைபெற்றது. 2018ஆம் ஆண்டிற்கான ஹாம்வென்சன் மே 18 முதல் 20 வரை நடக்கவுள்ளது. இந்த ஹாம்வென்சனில் கலந்துகொள்ள 27 அமெரிக்க டாலர்கள் நுழைவுக்கட்டணமாக செலுத்த வேண்டும். டிக்கெட் பற்றிய விபரங்களுக்கு tவீநீளீமீts@லீணீனீஸ்மீஸீtவீஷீஸீ.ஷீக்ஷீரீ எனும் முகவரியை நாடலாம்.

பிராக்டிகல் எலக்ட்ரானிக்ஸ்

எலக்ட்ரானிக்ஸ் புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவு. அப்படியே வெளிவந்தாலும், அவை விற்பனையாவது அதனினும் குறைவு. பெரும்பாலான ஹாம்களுக்கே, இது போன்ற ஒரு புத்தகம் தமிழில் வெளிவருவது தெரிவதில்லை.  இந்த பகுதியில் நாம் பார்க்கவுள்ள புத்தகம்கிஙிசி பிராக்டிகல் எலக்ட்ரானிக்ஸ்  வரிசை 3”. இந்த வரிசையில் இதற்கு முன் இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளது. அவை இரண்டுமே ஹாம் வானொலியினர் கட்டாயம் படித்திருக்க வேண்டிய புத்தகம்.

நவீன மின்னணுத் துறை வெகுவிரைவாக முன்னேறி வருகின்ற இந்த நாளில், அதன் நுணுக்கங்களை கற்றுக்கொள்வதும், சரிசெய்யும் முறைகளை தெரிந்துகொள்வது சற்றுக் கடினமான ஒன்றாகும். இந்த துறையில் உருவாக்கப்படும் கருவிகளைப் பழுது பார்க்க புதிய பல சோதனைக் கருவிகள் வெளிவந்துள்ளன. ஆனால் இதில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்குச் சோதனைக் கருவிகளை வாங்கும் வசதி மற்றும் தகுதி உள்ளதா என்பது கேள்விக்குறியாகும்என்று இந்த புத்தகத்தின் ஆசிரியர் மின்னணு கூறுகிறார்.

எளிதாகத் தயாரிக்க சில புதிய கருவிகள் பற்றிய விபரங்கள் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மல்டி மீட்டர் இல்லாமலும் பழுதுபார்க்கும் முறைகளும், பழுதடைந்த பாகங்கள் சிலவற்றை ரிப்பேர் செய்யும் வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தபுத்தகத்தில்டிரான்ஸிஸ்டர்களின்பாகுபாடுகள், சர்க்யூட் அமைப்புகள், இசைக் கருவிகளில் உபயோகப்படுத்தும் ஆம்ப்ளிபயர்கள், இணைப்பு முறைகள், பழுது பார்க்க உதவும் கருவிகள் என பல புதிய கட்டுரைகளை 135 பக்கங்களில் அடக்கியுள்ளனர். ரூ. 10க்கு கிடைக்கும் இந்த புத்தகம் தான், இன்று எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக தமிழில் விற்பனையாகும் குறைந்த விலை கொண்ட புத்தகமாகும். சோலார் கால்குளேட்டர்

ஹாம் வானொலிகளுக்காக வெளிவந்துள்ள மற்றும் ஒரு செயலிதான் இந்தஹாம்’ (பிணீனீ) எனும் ஆண்ட்ராய்ட் செயலி. வழக்கமான செயலிகளில் இருந்து இது சற்றே வேறுபட்டு இருப்பதற்கு காரணம், இதன் எளிமையான தன்மை. புதியவர்களுக்கும் எந்த விதமான குழப்பம் இன்றி, பயன்படுத்த வசதியாக இருக்கும் இந்த செயலி இன்றும் பல ஹாம்கள் விரும்பி பதிவிறக்கம் செய்யும் செயலியாகும். இந்த செயலியின் மற்றும் ஒரு சிறப்பு, இது ஓபன் சோர்ஸ் செயலியாகும், எனவே, உங்களுக்கு தேவையான வடிவில் இந்த செயலியை மாற்றி அமைத்துக்கொள்ள இதில் வசதி உண்டு. என்ன ஒன்று, உங்களுக்கு ஆண்ட்ராய்ட் செயலி மொழி தெரிந்திருக்க வேண்டும்.

எந்த அலைவரிசை, எந்த நேரத்தில் தெளிவாக கிடைக்கும் என்பதை சூரியப் புள்ளிகளைக் கொண்டு கணக்கிட்டு இந்த செயலி வழங்குவதால், நாம் எளிதாக அனைத்து நாட்டு ஹாம் வானொலிகளுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. அதேப் போன்று, சிணீறீறீ sவீரீஸீஐ வைத்து ஹாம் வானொலியில் ஒலிபரப்புபவர் யார்? அவரின் முகவரி போன்றவற்றையும் இந்த செயலி நமக்கு வழங்குகிறது. 2012ல் வெளியிடப்பட்ட செயலியை, இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பிணீனீ செயலி பற்றி விரிவாக அறிந்து கொள்ள லீணீனீ.ணீஸீபீக்ஷீஷீவீபீ@sனீமீக்ஷீtஹ்.ஷீக்ஷீரீ எனும் இணைய முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.