Home சம்பவம் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ : ரூ.1 கோடி துணிகள் எரிந்து நாசம்

ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ : ரூ.1 கோடி துணிகள் எரிந்து நாசம்

7
0
SHARE

போரூர், அக். 2&

கோயம்பேடு, சின்மயா நகர் வலபுரி வினாயகர் கோவில் தெருவில் தனியார் ஆடைகள் ஏற்றுமதி நிறுவனம் 4 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு நவீன எந்திரங்களில் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் கட்டிடத்தின் 4&வது தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்த காவலாளி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.உடனாடியாக 7 தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயின்வேகம்அதிகமாகஇருந்ததால்மற்றதளத்திற்கும்பரவியது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். தீவிபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள துணிகள், நவீன எந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்ததால்  அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாக தெரிகிறது.இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here