Home அரசியல் எந்த அரசு இருந்தாலும் சிவாஜியை மதித்தே ஆகவேண்டும் யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை ...

எந்த அரசு இருந்தாலும் சிவாஜியை மதித்தே ஆகவேண்டும் யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை பரபரப்பை ஏற்படுத்திய கமல் பேச்சு

38
0
SHARE

சென்னை, அக். 2&

எந்த அரசு இருந்தாலும் சிவாஜியை மதித்தே ஆகவேண்டும்.இதற்காக யாரையும் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை என்று கமல் பேசினார்.

சிவாஜி மணிமன்டப திறப்பு விழாவில்  நடிகர் கமல் பேசியதாவது.மாநில, தேசிய, ஆசியா எல்லைக்கடந்த உலக நடிகர் சிவாஜி. ஒரு வேலை சினிமாவில் நடிக்கவரவில்லை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், சினிமா ரசிகனாக இருந்து நிச்சயம் இந்த விழாவிற்கு வந்திருப்பேன். உள்ளே வர அனுமதி கிடைக்காவிட்டாலும் வெளியே நின்று கொண்டிருக்பேன். ஆக இந்த விழாவிற்கு எப்படியும் நான் வந்திருப்பேன்.

அரசியல்எல்லைஎல்லாம்கடந்தஇந்தநடிகனுக்குஅரசும், குடியும் சொல்லும் நன்றி அறிவிப்பு என்று தான் நான் கருதுகிறேன். நாம் கூறும் நன்றிகளை அவர்களின் குடும்பத்தினார் கண்டுகளிப்பதை என்றால் உணரமுடிகிறது ஏனெனில் தாமதமாக அந்த குடும்பத்தில் சேர்ந்த பிள்ளைகளில் நானும் ஒருவன் அந்த குடும்பத்தின் அனுமதியுடன்.

எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி என்ற கலைஞனை மதித்தே ஆகவேண்டும் நிச்சயம் மதிப்பார்கள் என்பது உறுதி.

  இதற்காக யாரையும் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை தன்னால் நடக்கும் தமிழர்கள் நன்றி மறவாதவர்கள் எப்பொழுதும் இந்த கலைஞனை நினைவில் வைத்துக்கொண்டிருப்பார்கள்.

சிவாஜிக்கு இருக்கக்கூடிய கோடிக்காணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன், கலைஞர் என்பதையும் தாண்டி ரசிகன் என்ற முறையிலே நான் இங்கே வந்துள்ளேன். இன்றும் முயன்று கொண்டிருக்கிறோம் சிவாஜியைப்போல் நடிக்கவேண்டும் என்று. இங்கு உள்ள அனைவரும் முயன்று தோற்றவர்களே. அதுதான் எங்கள் நடிப்பை மேம்படுத்திக்கொண்டிருக்கிறது.

அப்பேர்பட்ட நடிகனுக்கு நன்றி கூற வந்துள்ளேன் எனுக்கு அனுமதியளித்தகலையுலகத்திற்கும்,அரசிற்கும்,அரசியலுக்கும் நன்றி என்று பேசினார்.

நடிகர்சிவாஜியின் மணிமன்டபத்தை அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் செய்தித்துறைஅமைச்சர் கடம்பூர் ராஜு திறப்பார் என்று அரசின் சார்பில்அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து நடிகர் பிரபு மூத்த கலைஞன் சிவாஜிமணிமன்டபத்தை முதல்வர் அல்லது துணை முதல்வர் திறப்பது அவருக்கு கிடைக்கும் மரியாதையாக இருக்கும் என்று அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

இதுபோல் நடிகர் சங்கமும் கோரிக்கை விடுத்திருந்தது.இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவாஜி மணிமன்டப திறப்பு விழா நாளில் வேறு ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள இருப்பதால் துணை முதல்வர் மணிமன்டபத்தை திறந்துவைப்பார் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று மணிமன்டபத்தை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்.இந்த சம்பங்களை மனதில் வைத்து கமல் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.