Home அரசியல் அரசியலில் வெற்றி பெற என்ன தேவை? ரஜினிகாந்த பரபரப்பு பேச்சு

அரசியலில் வெற்றி பெற என்ன தேவை? ரஜினிகாந்த பரபரப்பு பேச்சு

9
0
SHARE

சென்னை, அக். 2&

அரசியலில் வெற்றிபெற என்ன தேவை என்று ரஜினி பேசினார்.

நடிகர் சிவாஜி கணேசன் மணிமன்டபம் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: .பன்னீர்செல்வம் மிகவும் அதிர்ஷ்ட்டமானவர். அது நிறைய முறை நிருபணம் ஆகியுள்ளது. காலகாலத்திற்கும் நிற்கும் மணிமண்டபத்தை கட்டும் பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது. ஒரு வரைமுறைக்குள்ளே இருந்த நடிப்பு, நடை, உடை, பாவனை என்ற அனைத்திலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இந்தியாவில் உள்ள எந்த நடிகரும் இவரைப்போல் நடிக்கமுடியது என ஒரு அங்கிகாரம் பெற்ற மகா நடிகன். ஒரு நடிகனாக மட்டும் இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு மணிமண்டபம் கட்டியிருக்க மாட்டார்கள்.

அவருடைய நடிப்பாற்றலின் மூலம் நாம் நம்முடைய சுதந்திர வீரர்களின், சுதந்திரத்திற்காக பாடுபட்ட சரித்தர நாயகர்கள் உள்ளிட்டோர் வரலாற்றை படமாக்கி அவர்களின் கதையை தமிழ்நாட்டிலுள்ளகடைக்கோடிமக்கள் வரைக்கும் எடுத்துச்சென்று அந்த வழ்க்கையைக் கூறினார். சிவபுராணம், கந்தபுராணம் உள்ளிட்ட புராணங்களை மக்களிடையே கொண்டுசேர்த்தவர். அதனாலே தான் அவருக்கு இந்த மணிமண்டபம். கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த பொழுது நெற்றியில் பட்டையைப்போட்டு தன்னுடைய நடிப்பாற்றலை மட்டும் நம்பி உச்சத்தைத் தொட்டார் சிவாஜி. பல கோடியில் சிலரே இறந்த பின்பு மக்களால், அரசால் அங்கிகரிக்கப்பட்டு சிலையாக செல்கிறார்கள். அப்பேர்பட்ட மகானுடன் பழகி இருக்கிறோம் என்பது நாமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. இது அரசியல் துறை மற்றும் சினிமாத்துறை இரண்டும் இணைந்த ஒரு விழா.

சிவாஜிநடிப்பில்மட்டுமல்லஅரசியலிலும்அவர்களுடையசீடர்களுக்குபாடம்சொல்லிவிட்டேசென்றார்.  சிவாஜி தனியாக கட்சி ஆரம்பித்து தன்னுடைய சொந்த தொகுதியிலே தோற்றுப்போனார். அது அவருக்கு நடந்த அவமானம் அல்ல, அந்த தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம்.

அப்போதுஅவர்ஒருவார்த்தைக்கூறினார்அரசியலில்வெற்றிபெறநடிப்பு, செல்வாக்கு மட்டும் போதாது வேறொன்று தேவை. அது மக்களுக்கு மட்டுமே தெரியும் என்று. அது நிச்சயம் எனக்கும் தெரியாது, ஒருவேலை அது கமல்காசனுக்கு தெரிந்திருக்கக்கூடும். அதைக்கேட்டாலும் அவர் கூறமாட்டார். ஒருவேலை இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்.

நீங்கள் என் திரையுலகின் மூத்த அண்ணன் நீங்கள் சொல்லவேண்டும் என்று கேட்கிறேன். தம்பி என்றால் என்கூட வா சொல்கிறேன் என்று சொல்கிறார். மணிமண்டபத்தை கட்டிக்கொடுத்த அரசுக்கும், சிலை உருவாகக் காரணமாக இருந்த கருணாநிதிக்கும் நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

சிவாஜிகுடும்பத்தினரின்விடமுயற்சியும்ஒருகாரணமேஅவர்களுக்கும்என்னுடையநன்றியினைதெரிவித்துக்கொள்கிறேன். என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here