Home அரசியல் அதிகார போதையில் செயல்படும் முறையற்ற போக்கினை விட்டு பொருளாதரத்தை மீட்கும் முயற்சியில் பிரதமர் மோடி...

அதிகார போதையில் செயல்படும் முறையற்ற போக்கினை விட்டு பொருளாதரத்தை மீட்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வேண்டும் மு.க.ஸ்டாலின் கடிதம்

29
0
SHARE

சென்னை, அக். 2&

ஆட்சிக்குப்பெரும்பான்மைஇருக்கிறதுஎன்றஅதிகாரபோதையில்செயல்படும்முறையற்றபோக்கினைஉடனடியாககைவிட்டு, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி   உடனடியாக ஈடுபட வேண்டும் என மு..ஸ்டாலின்  கூறியுள்ளார்.

தி.மு..செயல்தலைவர் மு..ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், வண்ண வண்ண மத்தாப்புகளால் வாணவேடிக்கை காட்டுவது போல, வாக்குறுதிகளை அள்ளி வீசி,  பொருட்செலவில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இடைவிடாத பிரசாரம் செய்து, தனிப் பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆட்சி செய்யும் வகையில் வாக்குகளைப் பெற்ற பிரதமர்   மோடி தலைமையிலான பா... அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றனவா எனக் கேட்டால் மத்திய ஆட்சியில் இருப்பவர்களால் பதில் சொல்ல முடியாது. ஆனால், ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்து வரும் தண்டனைகளை, அவர்களைச் சார்ந்தவர்களே வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியிருப்பதில் இருந்து, மத்திய ஆட்சியின் 3 ஆண்டு கால செயல்பாடுகள் சாதனையா?  வேதனையா என்பது அம்பலமாகியுள்ளது.

வளர்ச்சிஎன்றமுழக்கத்தை 2014&ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் முன்வைத்து, வெற்றிபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 3  வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, நாட்டை  வீழ்ச்சி  என்ற பாதைக்குக் கொண்டு போய்விட்டது.  அடித்தட்டு மக்களும், அன்றாடம் காய்ச்சிகளும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும், அனைத்துச் செயல்பாடுகளுக்கும்  ஆதார் எண்  கட்டாயமாகக் கொடுக்க வேண்டும், ரொக்கமாக பணம் பரிவர்த்தனை செய்வதை கைவிட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும், என்று கண்ணை மூடிக்கொண்டு அமல்படுத்தியுள்ள கெடுபிடியான நடவடிக்கைகள் இன்றைக்கு அனைத்துத் தரப்பையும் பாதித்து விட்டது.

ஆதார்கார்டுகளைகட்டாயமாக்கக்கூடாதுஎன்றுஉச்சநீதிமன்றமேதீர்ப்பையும்,   மீறி,  எதிலும் ஆதார் மயம்  என்று மக்களை இந்த 3 வருட காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு நெருக்கடியில் ஆழ்த்தி இருக்கிறது இந்த அரசு

அதன் காரணமாக, அனைத்துத்தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானதற்குச் சரியான எடுத்துக்காட்டாக ரூ. 1000, 500   நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட விவகாரம் அமைந்துள்ளது. இதனால் வங்கிகளின் முன்பு வரிசையில் நின்றே உயிரைப் பறிகொடுத்தவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம்.  நீண்ட வரிசையில் நின்று பா...விற்கு வாக்களித்த ஒரே பாவத்திற்காக, அதேபோன்று நீண்ட வரிசையில் நின்றதால் மாண்ட சோகம்  மத்தியில் உள்ள பா... அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டது.   

  ஆதார், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற தாக்குதல்களில் இருந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்பாகவே, அடுத்த சுனாமி தாக்குதலாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் எனும் ஜி.எஸ்.டி.யும் நடு இரவிலேயே நாடாளுமன்றத்தைக் கூட்டி அமல்படுத்தப்பட்டது.

இதனால்சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பாதிப்பு என்றும், வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சிக்கு உள்ளாகும் என்றும் தி.மு.. போன்று, அனைத்து எதிர்கட்சிகளுமே எச்சரித்தோம். ஆனால்,  தனி மெஜாரிட்டி இருக்கிறது என்ற அதிகார போதையில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த 8 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் குறைத்து விட்டது.

பா... ஆட்சியை, அக்கட்சியைச் சார்ந்தவர்களே விமர்சித்து வருகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார நிலை என்ன என்பதை முழுமையாக அறியும்போது அதிர்ச்சியும், வேதனையுமே மிஞ்சுகிறது. தமிழ்நாட்டின் டாலர் நகரம் எனப்படும் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் நசிவடைந்ததும், திண்டுக்கல்லில் தோல் ஏற்றுமதி வணிகம் முடங்கியதும், மோடி தலைமையிலான பா... அரசின் நிர்வாகத்திறன் எப்படி இருக்கிறது என்பதற்கு வேதனைக்குரிய சாட்சிகளாக இருக்கின்றன.

வளர்ச்சியும் ஏற்படவில்லை, ஊழலும் ஒழியவில்லை, கறுப்புப் பணமும் ஒழியவில்லை, ஊழல் புரிந்தோரை தண்டிக்கும் லோக்பாலும் இதுவரை அமைக்கப்படவில்லை, ஏழ்மையும் நீங்கவில்லை. அதற்கெல்லாம் மாறாக, மத்தியில் உள்ள பா... ஆட்சியில் ஏழை எளியவர்களின் நிம்மதி பறிபோயிருக்கிறது. சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியும் காணவில்லை.

ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கும் ரூ. 15 லட்சம் வரவில்லை. வளர்ச்சி என்று கூறிவிட்டு தங்களின் காணும் இந்தியாவில், மதத்தின் பெயரால் மாட்டிறைச்சி உண்பதைத் தடுத்தும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களிடம் துவேஷத்தை எழுப்பி, நாட்டுப் பற்று மிக்கவர்களைக் கூட,  தேசவிரோதிகள்  என்று சித்தரிக்கும் போக்கினால், உழைக்கும் மக்களை முச்சந்தியில் நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு.

ஆட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற அதிகார போதையில் செயல்படும் முறையற்ற போக்கினை உடனடியாக கைவிட்டு, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில்   பிரதமர்   மோடியும்,     மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி   உடனடியாக ஈடுபட வேண்டும் என  அதில் கூறியுள்ளார்.