Home விளையாட்டு தென்னிந்திய அளவிலான விளையாட்டு போட்டிகள்: கைப்பந்துபோட்டியில் பி.கே.ஆர். கல்லூரி அணி முதலிடம்

தென்னிந்திய அளவிலான விளையாட்டு போட்டிகள்: கைப்பந்துபோட்டியில் பி.கே.ஆர். கல்லூரி அணி முதலிடம்

7
0
SHARE

கோவை, அக். 1 &

தென்னிந்திய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கைப்பந்து போட்டியில் பி.கே.ஆர் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான இவாஞ்சலின் நினைவு விளையாட்டு போட்டிகள் செப்.26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் இருந்து தலைசிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அணிகள் கலந்து கொண்டன. கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி மற்றும் கபடி போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடந்தது. இறுதி கால்பந்து போட்டியில் டைபிரேக்கர் முறையில் கேரளாவை சேர்ந்த எஸ்.எஸ்.கல்லூரி அணி முதலிடத்தையும், காருண்யா பல்கலைக்கழக அணி 2ம் இடத்தையும் பெற்றது. ஹாக்கி போட்டியில் டைபிரேக்கல் முறையில் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணி முதலிடத்தையும், காருண்யா பல்கலைக்கழக அணி 2ம் இடத்தையும் பெற்றது. கபடி ஆண்கள் பிரிவில் அண்ணாமலை பல்கலைக்கழக அணியும், பெண்கள் பிரிவில் சேலம் ஏ.வி.எஸ். கல்லூரி அணியும் முதலிடம் பிடித்தது.

கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சத்தியபாமா பல்கலைக்கழக அணியும், பெண்கள் பிரிவில் கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரி அணியும் முதலிடத்தை பிடித்தன. கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா புனித பெர்க்மான்ஸ் அணியும், பெண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி அணியும் முதலிடம் பிடித்து ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசையும், சுழற் கோப்பையையும் வென்றது. நிறைவு விழாவில் கேரள மாநில முன்னாள் டி.ஜி.பி. ஜேக்கப் தாமஸ் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் பால்தினகரன், துணைவேந்தர் இ.ஜே.ஜேம்ஸ், ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் பால்தினகரன், டிரஸ்டி ஜெயகுமார் டேனியல், இணை துணைவேந்தர் ரெட்லிங் மார்கரெட், பதிவாளர் எலைஜா பிளசிங், உடற்பயிற்சி இயக்குனர் காலேப் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here